இலங்கையின் மலையக பகுதிகளில் 4500 வருடங்களுக்கு முன்னதாகவே மனித இனங்கள் வாழ்ந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கை புராதான ஆய்வு திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஹப்புத்தளை, ஹல்தமுல்லை, பெரகல போன்ற போன்ற
பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வராய்ச்சிகளில் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே
அங்கு மனித இனம் வாழ்ந்தமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், ஆயுதங்கள்
போன்றன இந்த பகுதிகளில் மீட்கப்பட்டன. அத்துடன் பல்வேறு கல்லறைகளும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire