தற்கொலைப் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை சமூகத்துடன் மீள இணைத்த ஒரே நாடாக இலங்கை திகழ்கின்றது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். உலகின் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் 230 தடவைக்கு அதிகமாக தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், இதில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 1400 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். உலகப் பயங்கரவாதிகள் பலர் தற்போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை பயன்படுத்தி வருகின்ற போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை முதலில் அறிமுகம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தற்கொலைப் போராளிகளின் குடும்பங்களுக்கு புலிகள் காணிகளை வழங்கி ஊக்குவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire