mardi 12 mars 2013

கி.வீரமணி, மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், பேரா. சுப.வீ. உட்பட தலைவர்கள் கைது


தமிழ்நாடே ஸ்தம்பித்தது - இலட்சக்கணக்கில் தமிழர்கள் கைதுசென்னை, மார்ச் 12- சென்னையில் ஈழத் தமிழர்களின் உரிமை வாழ்வுக்காகவும், இனப்படு கொலையாளன் ராஜபக்சேவைக் கூண்டிலேற்ற வற்புறுத்தியும் ஜெனிவா மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் டெசோ விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று (12.3.2013) தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தம், கடையடைப்பு முழு வெற்றி பெற்று, தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி எரி மலையை உலக நாடுகளுக்கே உணர்த்தி விட்டது.
புதுச்சேரி மாநிலத்திலும் வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றது.
சென்னையில் டெசோ தலைவர்கள் கைது
சென்னையில் இன்று 11.30 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை சந்திப்பில் மறியல் செய்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் உட்பட ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 49ஆவது முறையாக திராவிடர் கழகத் தலைவர் கைது செய்யப்பட்டார். கைதாகுமுன்னர் ஈழத் தமிழர் பிரச்சினையில் ராஜபக்சேவுக்கு எதிரிகள் யார்? நண்பர்கள் யார் என்பதை இந்த அறப்போராட்டம் உணர்த்தி விட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
கோவை - திருப்பூர் ஸ்தம்பித்தது
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெசோ பந்த்துக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது. அங்கு கிட்டத்தட்ட 30,000த்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இன்று காலை டெசோ அமைப்பு அழைப்பு விடுத்த முழு அடைப்புக்கு தமிழகத்தில் பேராதரவு கிடைத்து விட்டது.  கடைகள் பெருமளவில் அடைக்கப்பட் டுள்ளன.  தொழில் மாவட்டங் களான கோவை, திருப்பூரில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. கோவையில் ஆட்டோக்கள் பெருமளவில் ஓடவில்லை. கடைகளும் பெருமளவில் அடைக்கப் பட்டுள்ளன. திருப்பூரைப் பொறுத்தவரை அங்கு மட்டும் 10,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட் டுள்ளன. கடைகள் பரவலாக அடைக்கப்பட் டுள்ளன. அதேபோல பிற வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன
வாகை சூடிய வாலாஜா
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற திமுகவினர் கைதாகி யுள்ளனர். சென்னை பீச் செல்லும் ரயிலை மறிக்க முயன்ற 100 பேரை காவல்துறை கைது செய்தது. இலங்கைக்கு எதிராக டெசோ சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது. அய்.நா சபையில் அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம் விழுந்தது
நகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட 500 பேர் கைதாகியுள்ளனர்.  விழுப்புரம் போராட்டத்தின் கை ஓங்கியதால் விழுந்தது.
திகைக்க வைத்த திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை கணக்குப்படி டெசோ அமைப்பு நடத்திய பொதுவேலைநிறுத்தம் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, ஜமுனாமத்தூர், போளூர், செங்கம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்து 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை நகரில் மட்டும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, செங்கம் இப்பகுதிகளில் 70 சதவீத கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. போளூர், ஜமுனா மத்தூர், கண்ண மங்களம் பகுதிளில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கைதிகள் காட்டிய உணர்வு
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து மதுரை சிறையில் விவேக், சத்தியமூர்த்தி ஆகிய இரண்டு கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண் டனர். சிறைத்துறை அதிகாரிகள் சமாதானம் பேசியும், அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தனர். டெசோ அமைப்பு சார்பில் நடத்தப் படும் பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரி வித்தும் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள் வதாக தெரிவித்துள்ளனர் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செந்துறை சீறியது
செந்துறையில் ஒன்றிய செயலாளர் எம்.ஞான மூர்த்தி தலைமையில், திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் டெசோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேருந்து மறியல் செய்த அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பினர். மத்திய அரசு இலங்கை தமிழர் விவகாரத்தில் டெசோ அமைப்பின் வேண்டு கோளை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். பின்னர் ராஜபக்சே உருவபொம்மையை எரித்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு எழுந்தது!
ஈரோடு மாவட்டத்தில் டெசோ அமைப்பு அறிவித்தப்படி வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடை கள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்ளிட்ட இடங்களிலும் வணிகர்கள் தங்களு டைய கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர். ஈரோடல்லவா எழுச்சியுடன் எழுந்தது.
திடுக்கிட வைத்த திண்டுக்கல்
டெசோ அமைப்பின் பொதுவேலை நிறுத்ததை யொட்டி, திண்டுக்கல் நகரில் நேற்று திமுகவினர் கடைவீதிகளில் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் இன்று திண்டுக்கல் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே முன்னாள் அமைச்சர் பெரியசாமி தலைமையில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட திமுகவினர் டெசோ அமைப் பின் கோரிக்கைகளை முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலம் வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீரபாண்டி தலைமையில் கழகத் தோழர்கள் கைதாயினர்.
பலே, பலே பண்ருட்டி
பண்ருட்டியில் டெசோ அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கைதுபண்ருட்டி நான்குமுனை சந்திப்பு சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டெசோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
திமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர்  உள்ளிட்ட டெசோ அமைப்பினர் திமுக அலுவலகத்தில் இன்று காலை பேரணியாகப் புறப்பட்டு வந்தனர். பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர். பண்ருட்டி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன.
புதுக்கோட்டையில் போர்முரசு
புதுக்கோட்டையில் பந்த் நடத்துவதன் அவசி யத்தை விளக்கியமைக்காக திமுக திக தோழர்கள் மாவட்டச் செயலாளர் தலைமையில் கைது செய்யப் பட்டனர். இன்று பந்த் நடத்துவதற்காக கடந்த சில தினங்களாக திமுக மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் புதுக்கோட்டையின் கடைவீதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவரகளிடமும் விளக்கி வந்தனர். அதனை முடக்கும் விதமாக இன்று காலை திமுக மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு திக மாவட்டத் தலைவர மு.அறிவொளி உட்பட ஏராளமானோர் கணேஷ்நகர் காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப் பட்டோர் விவரம் திமுக மாவட்ட செயலாளர் பெரியண்ணன்அரசு திக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி நகரத் தலைவர் சு.கண்ணன் திமுக நகர செயலாளர் அரு.வீரமணி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஸ்வரி முன்னாள் நகரமன்றத் துணைத் தலைவர் நைனாமுகம்மது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முரசொலிபாலு தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராசா தொழிலாளர் முன்னேற்றக் கவுன்சில் தலைவர் அ.ரெத்தினம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கமலா, நகர துணைச் செயலாளர் அப்புக்காளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் பண்பாட்டுக்கலை அணி துணை அமைப்பாளர் நாகராசன் நகர இளைஞரணி அமைப்பாளர் அரிகரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சசிக்குமார் பிரபாகரன் நகர இளைஞரணி துணை அமைப்பாளரகள் கார்த்தி ஷாஜகான் என்கிற சேட்டு நகர துணை செயலாளர் கமலாபாண்டியன் கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட அமைப்பாளர் என்.சாத்தையா ஹென்றி மகளிரணியைச் சேரந்த அமுதா வசந்தா உட்பட எழுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். இரண்டாவது கைதில் திக மாவட்ட செயலாளர் ப.வீரப்பன் நகர செயலாளர் ரெ.மு.தருமராசு மற்றும் திமுக தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடி காட்டிய தீரம்
கடைகளை அடைக்கச் சொல்லி ஊர்வலமாக சென்று காலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமையில தி.மு.க , தி.க தோழர்கள் மறியலில் ஈடுபட்டபோது நூற்றுக்கணக் கானோர்  கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டோர் விவரம்.  திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி .திராவிடமணி, மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் பிராட்லா, நகர திக செயலாளர் கலைமணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் எஸ்.முரளி, நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டித்துரை, பாலசுப்பிரமணியம், நகர செயலாளர் துரை. கண்ணன், நகர துணைச் செயலாளர் துரை.நாக ராசன், மாணவரணி அமைப்பாளர் ஆனந்தன், செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜான் பீட்டர், ராம.அன்பழகன், சன்சுப்பையா, மாண வரணி பொறுப்பாளர் எஸ்.தங்கராசு, மும்பை மாநில தி.மு.க செயலாளர் ஜேசுதாசு, தி.மு.க ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் சிதம்பரம், எஸ்.அய்யப்பன்  முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துசாமி, முனீஸ்வரன், மெ.பழனியப்பன் உள் ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப் பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனகாபுத்தூரில் அனல்
அனகாபுத்தூர் மாவட்ட செயலாளர் அனகை ஆறுமுகம், பெரியார் பெருந்தொண்டர் அனகாபுத் தூர் தலைவர் நாத்திக அரங்க சிவா, இளைஞரணி மண்டல அமைப்பாளர் சுரேஷ், இளைஞரணி செயலாளர் கே.விஜயகுமார், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சன் சரவணன் ஆகிய 5 கழகத் தோழர்கள் சங்கர் நகர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலை நிமிர்ந்த தாம்பரம்
தாம்பரம் மாவட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் தி.மு.க, தி.க ,வி.சி, திராவிட இயக்க தமிழர் பேரவை கழகத் தோழர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். தி.க மாவட்ட தலைவர் ப.முத்தையன், பொதுக்குழு உறுப்பினர் கே.எம்.சிகாமணி ஆகி யோருடன் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளர். தமிழர் இனவுணர்வின் தலை நிமிர்ந்த தாம்பரத்தில் பார்க்க முடிந்தது.
கடலூர் களை இழந்தது தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  புகழேந்தி தலைமையில் தி.க நகர செயலாளர் தென்.சிவக்குமார் தலைமையிலும் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பழ.தாமரைச்செல்வன் தலைமையில் வி.சி தோழர்கள் பெருமளவு கலந்து கொண்டனர். சுப்பராயலு ரெட்டி திருமண மண்டபத்திலும் செங்குந்தார் திருமண மண்டபத்திலும் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடைகள் எங்கும் மூடப்பட்டுக் கிடந்ததால் நகரே களை இழந்து காணப்பட்டது.
நெய்வேலி நிமிர்ந்தது நகரில் தி.மு.க நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. தி.க.நகர தலைவர் ச.கண்ணன், நகர செயலாளர் இசக்கிமுத்து, கடலூர் மாவட்ட தி.க தலைவர் தண்டபாணி, வே.ராவணன், இரா.மாணிக்கவேல், இராசா, சிதம்பரம் ராமதாசு உள்பட கழகத்தோழர்கள் பெருமளவு கலந்து கொண்டனர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. ஈழத் தமிழர்க்கான போராட்ட உணர்வில் நெய்வேலி நிமிர்ந்து நின்றது.
அரூர்
தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தலைமையில் 60 பேர் கைது. திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம்
சிதம்பரத்தில் முழு அடைப்பு வெற்றி. அண்ணா மலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்பு களைப் புறக்கணித்து  ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
தஞ்சாவூர்
தஞ்சையில் திராவிடர் மாணவர் கழகத்தின் முயற்சியில் சரபோஜி கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரிக்குச் செல்லவில்லை. கல்லூரியின் வெளி யில் ராஜபக்சேவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வடலூர்
வடலூரில் தி.மு.க. தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200 பேர் கைது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகத் தோழர்கள் பாஸ்கரன், கண்ணன், குணா, ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் தி.மு.க. நகரச் செயலாளர் டி.வி.எம்.ஆர். சேகர் தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் கே. ஆறுமுகம், முன்னிலை யிலும், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன் தலைமையிலும்,  முகிலன் முன்னிலை யிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காஞ்சி மாவட்ட துணை செயலாளர் இந்திரா நாராயணன் தலைமையிலும், நகர செயலாளர் திருமாதாசன் முன்னிலையிலும் ஏராளமான தோழியர் - தோழியர்கள் காஞ்சிபுரம் சாந்தி சாலையில் ஊர்வலமாக சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
இராசபாளையம்
தி.மு.க. தோழர் - திராவிடர் கழக மாநில இளைஞ ரணி செயலாளர் இல. திருப்பதி தலைமையில் திராவிடர் கழகத் தோழர்கள் 90 பேர் இராசபாளையத்தில் கைது.
தீரமிக்க தென் சென்னை
தென் சென்னையில் தி.முக.. மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமையில் 4000 பேர்கள் கைது. தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்  தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் கடற்கரை சாலையில் கழகத் தோழர்கள் கைது. சென்னை சைதைப் பகுதியில் ஒரே ஒரு டீக்கடைகூட திறக்கப்படவில்லை. தென் சென்னை மாவட்டம் காமராஜர் சாலை குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன்பு தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட தி.க. மாவட்ட தலைவர் வில்வநாதன் இரா. பிரபாகரன், க. சதீஷ்குமார், விக்னேஷ், அப்துல்லா, கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், அரவிந்தன், சேட்டு, பெரியார் சேகர், துணைவேந்தன். மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை வழிகாட்டுகிறது
வடசென்னையில் ஆர்.டி. சேதுபதி தலைமையில் எட்டு இடங்களில் நடைபெற்ற மறியலில் 3000 பேர்  கைது. கடை வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
மதுரையில் மகத்தான வெற்றி
மதுரை மாநகரத்திலும், புறநகரிலும் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது. திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே. செல்வம் தலைமையில் கழகத் தோழர்கள் கைது உசிலம்பட்டியலில் மண் டல தலைவர் மீ. அழகர்சாமி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பவுன் ராசா தலைமையில் கழகத் தோழர்கள் கைது.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தி.மு.க , தி.க.வி.சி, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சுமார் 2000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரியில் மாவட்ட செயலாளர் தி.செங்குட்டுவன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கைதானர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணத்தில் மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் பிவிஎஸ்.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் க.மகேந்திரன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கைது.
திராவிடர் கழகம் சார்பில் சேலம் மண்டல செயலாளர் மு.தியாகராசன்,மாவட்ட செயலாளர், மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய தலைவர் மு.ராமசாமி, புலியாண்டியூர் கிளைக்கழக தலைவர் கி.ராஜா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
ஒசூர்
ஒசூரில் ஒன்றிய நகர செயலாளர் நிதியகுமார் , தி.க மாவட்ட துணை செயலாளர் வனவேந்தன் , பொதுக்குழு உறுப்பினர் மு.துக்காராம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் கைதாயினர். திராவிடர் கழக மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கைதாயினர்.
நேமேலி
வேலூர் மாவட்டம் நேமேலியில் காலை மணிக்கு நேமிலி ஒன்றிய செயலாளர் பி.குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சு.லோகநாதன் கைதானார்.
ஆலங்குடி
ஆலங்குடியில் அறந்தாங்கி மாவட்ட தலைவர் பெ.ராவணன், ஒன்றிய தி.க தலைவர் இரா.இளங்கோ, நகர தி.க செயாளர் து.குமார் மற்றும் கழகத் தோழர் கள் தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.து.கே.தங்கமணி நகர தி.மு.க செயலாளர் எஸ்.வி.செல்வம், தி.மு.க தோழர்கள் ,விடுதலை சிறுத்தை கட்சி தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மங்கள மஹாலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் களேபரம்
டெசோ அமைப்பின் சார்பாக இன்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
கரூர் மாவட்ட தி.மு.க., தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க. சார்பாக மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் இராஜேந்திரன், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பரமத்தி சண்முகம், மாவட்ட துணை செயலாளர் இரா.பிரபு, தொழிலாளர் அணி கண்ணதாசன், மகளிர் அணி சிவகாம சுந்தரி, மகேஷ்வரி சுப்பிரமணி, பூவை ரமேஷ் பாபு. திராவிடர் கழகம் சார்பாக மாவட்ட தலைவர் மு.க.இராஜசேகரன், மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, மாவட்ட இளைஞரணி தே.அலெக்ஸ், ம.செகநாதன், காமராஜ், பெருமாள் உள்ளிட்ட 1594 பேர் கலந்துகொண்டனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து காவேரியம்மாள் திருமண மண்டபத்தில் கைது செய்து அடைத்தனர்.
சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தி.மு.க. நகர  செயலாளர் கே. பாலசுப்பிரமணியம் மற்றும் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கைது, வி.சி. நகர செயலாளர் செல்வம் தலைமையில் 30 மேற்பட்ட தோழர்கள் கைது. தி.க. மாவட்ட தலைவர் விடுதலை சந்திரன், நகர தலைவர் அண்ணாதுரை, நகர செயலாளர் விஜய் ஆனந்தன், மாவட்ட செயலாளர் கோபி. இமயவரம்பன், 610-க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டன
நாட்டின் நாலாத் திசைகளிலும் நடந்தது மறியல்
கொளத்தூர் பகுதியில் முரளிதரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது
மதுரவாயலில் சண்முகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது
ராமநாதபுரத்தில் ஜே.கே.ரித்திஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தி.மு.க. நகர செயலாளர் தலைமையில் 300 பேர் கைது சேலத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் செய்த 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைது. விழுப்புரம் - திருக்கோவிலூரில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.பி. ஆதிசங்கர் உள்ளிட்ட 300 பேர் கைது
உதகையில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது.
தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா தலைமையில் மறியல் செய்த 500 பேர் கைது
தென்சென்னையில் 9 இடங்களில் மறியல் செய்த சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ஜெ. அன்பழகன் உள்பட நான்காயிரம் பேர் கைது.
திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது.
அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். திருவள்ளூரில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சுதர்சனம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது.
கோவையில் மு. ராமநாதன் தலைமையில் மறிய லில் ஈடுபட்ட 300 பேர் கைது

Aucun commentaire:

Enregistrer un commentaire