சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்தை முற்றுகையிட முயற்சித்ததாகக் கூறப்படும் இந்தியாவின் தி.மு.க. பொருளாளர் எம்.கே.ஸ்ராலின், திராவிடர் கழகத் தலைவர் கே.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் உட்பட ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், வள்ளுவர்கோட்டத்திலிருந்து சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிராலயத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது கைதுசெய்யப்பட்டனர்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், தமிழர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் எனவும் இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தான் நம்புவதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
இந்த விடயத்தில் இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எமது உறுதியான கோரிக்கை எனவும் அவர் கூறினார்

Aucun commentaire:
Enregistrer un commentaire