mardi 5 mars 2013

இலங்கை சர்வதேச போர்க்குற்றம் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திடப் போவதில்லை


சர்வதேச போர்க்குற்றம் குறித்த நீதிமன்றம் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டுக்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடிய எந்தவொரு பிரகடனத்திலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என தெரிவித்துள்ளது.
தெற்காசியாவின் எந்தவொரு நாடும் இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இந்தியா கூட இந்த பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென சிலர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.
சில நாடுகளின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதியளிக்குமாறு மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சில நாடுகள் தங்களுக்கு தேவையான வகையில் விசேட பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் யோசனையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் எதிர்வரும் 15ம் திகதி 210 யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire