vendredi 29 mars 2013

ராஜபக்ஷ தலைமைக்கு எதிரானது ஜெனீவா பிரேரணை என்பன ;மங்கள சமரவீர

தமிழ்நாட்டில் இடம்பெறும் எதிர்ப்புகள் மற்றும் ஜெனீவா பிரேரணை என்பன இலங்கைக்கு எதிரானதல்ல எனவும் அது ராஜபக்ஷ தலைமைக்கு எதிரானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  நீதி, நியாயத்தை சிறுதுளியேனும் பொருட்படுத்தாது ஆட்சி நடத்திச் செல்லும் ராஜபக்ஷ தலைமையின் ஊடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 2014ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்றரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள அறத்தலாவ பிக்குகள் கொலை சித்திரத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சித்திரத்தில் புலிகள் பிக்குகளை தாக்கிய பகுதியை பார்வையிடவில்லை என அவர் நினைவுபடுத்தினார்.
அவ்வாறு அவர் பார்வையிடமால் விட்டமைக்கு காரணம் இம்முறை தேசத்திற்கு மகுடம் ஆரம்பித்து வைக்கச் சென்ற போது, ஜனாதிபதியை வரவேற்றது கருணா அம்மானும் பிள்ளையானும் என மங்கள சமரவீர சுட்டிக் காட்டினார்.
சிங்கள பெளத்தர்கள் என சொல்லிக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கு இடையூறு செய்வோர் பௌத்த குடிமகன்கள் அல்ல எனவும் அவர்கள் குண்டர் கும்பல்கள் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இலங்கை பிக்குகளை தாக்கிய அதிதீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு தட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மங்கள சமரவீர இலங்கையில் பௌத்த அதி தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire