இலங்கை தூதகரத்தை முற்றுகையிட முயன்ற, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ உட்பட, 700 பேரை, போலீசார் கைது செய்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நல வாழ்வு இயக்கம் சார்பில், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம், நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின், போது ராஜபக்ஷே உருவபொம்மையை ம.தி.மு.க.,வினர் தீவைத்து கொளுத்தினர். பின்னர், இலங்கை தூதரகத்தை முற்றுகையிட சென்ற வைகோ உட்பட, 700 பேரை, போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தால், குளக்கரை சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire