கடற்கொள்ளையர்களை போன்று அரசாங்கம் செயற்படுகின்றது : கயந்த கருணாதிலக
அரசாங்கம் கடற்கொள்ளையில் ஈடுபடும் சோமாலிய கடற்கொள்ளையர்களைப் போல்
நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றதென ஐக்கிய தேசியக் கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின்
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி நாட்டு மக்களின் மீது வாழ்க்கைச் சுமையை
அதிகரித்த நிலையில் எதிர்வரும் ஏப்பிரல் மாதமளவில் பஸ் கட்டண அதிகரிப்பு
இடம்பெறவுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் விலைவாசிகளை அதிகரித்து மக்களின்
பணத்தை அரசு கொள்ளையடிக்கின்றது.
யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள்
பூர்த்தியடைந்த நிலையிலும் மக்கள் பசிக்கும் கஷ்ட துன்பத்திற்கும்
முகங்கொடுத்துக் கொண்டேயுள்ளனர். அரசாங்கம் புதுப்புது வசனங்களைக் கூறி
மக்களை ஏமாற்றி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றதென அவர் மேலும்
தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire