dimanche 17 mars 2013

சீன ஜனாதிபதி ஜின்பிங், தொலைபேசி மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இறைமையை பாதுகாக்க பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும்


இலங்கையின் இறைமையை பாதுகாக்க பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங், தொலைபேசி மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய உறவுகள் பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜின்பிங்கிற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு நீடித்து வருவதாகவும், சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை மக்கள் வெகுவாக பாராட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் இறைமை போன்ற விவகாரங்களில், இலங்கை முழுமையான ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கத் தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்த வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி கோரியிருந்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire