vendredi 5 octobre 2012

20 லட்சம் தொழிலாளர்கள் இந்தோனேசியாவில் வேலை நிறுத்தத்தில்!


இந்தோனேசியாவில் சம்பள உயர்வுபல்வேறு சலுகைகள் கேட்டு 20லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் போராட்டம் நடத்தினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள தொழிற்சாலைகளில்குறைந்த ஊதியம் வழங்குவதாகவும்,சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்றும் பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் புகார் கூறி வந்தனர். 

இந்நிலையில், 700க்கும் அதிகமான தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று திடீரென ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஜகார்தா புறநகர் பகுதியில் உள்ள பெகாசி பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். 

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வுஇன்சூரன்ஸ்சமூக பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எந்த சலுகைகளும் இல்லாமல் தற்காலிக ஊழியர்களை தொழிற்சாலைகள் நியமித்து கொள்ளலாம் என்ற அரசு கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் நேற்று இந்தோனேசியா முழுவதும் தொழிற்சாலைகள் முடங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும்எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது.

Aucun commentaire:

Enregistrer un commentaire