மானாமதுரை மூங்கில் ஊரணியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் குடிசை வீடுகளுக்கு தீவைத்து விட்டு ஓடிவிடுவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
முன்பு தேவதாஸ், பவானி, நாகராஜ் ஆகியோர்களது குடிசை வீட்டிற்கு இரவு நேரங்களில் தீவைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் தீவைப்பதற்காக மண்ணெண்ணெய்பாட்டிலுடன் வந்துள்ளார். அங்குள்ளவர்கள் பார்த்தவுடன் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
நேற்று மதியம் 12 மணிக்கு சிவக்குமார் குடிசை வீட்டில் பின்புறமாக தீவைத்ததால், தீ முற்றிலுமாக பரவி முழுவதும் எரிந்தது. மானாமதுரை தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire