விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களை இன்னும் சில வாரங்களில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சட்ட ஆலோசனைக்குழு நேற்று அறிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு செயன்முறையின் இறுதி நடவடிக்கை மற்றும் அடுத்தக்கட்ட செயற்பாடு என்பவை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என அதன் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் தடுப்புக் காவலில் இருக்கும் சந்தரப்பத்தில் கூட பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள், அவ்வியக்கத்தின் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் நம்பத்தகுந்த ஆதராங்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளதாக கம்லத் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire