கனடாவில் நவம்பர் மாதம் 3 ந்திகதி நடைபெறப்போகும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மாவீர்களின் பெயரால் ஒரு கூட்டம் எதிர்த்து மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறது.
துயிலுமில்லப் பாடலை தனது கட்சியின் கொள்கை விளக்கப் பாடலாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மாற்றி மாவீர்களை அசிங்கப்படுத்தியபோது மௌனமாக இருந்த இவர்கள் மற்றும் இவர்கள் ஆதரவு இணையங்கள், நவம்பர் 3 ந்திகதி நடைபெறப்போகும் ஒரு நிகழ்ச்சிக்காக மாவீர்கள் பெயரைச் சொல்லி மாவீர்களை அவமதித்த நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து நின்று எதிர்ப்பது முரண்பாடாக உள்ளது.
உண்மையிலேயே கலைநிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டியது நவம்பர் மாதத்தில் அல்ல மாவீரர் வாரத்தில்தான் ( நவம்பர் 21- 27). இதைக் கூட தெரியாமால் தமக்குப் பிடிக்காதவர்கள் இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பதால் அவர்களை எதிர்ப்பதற்காக மாவீரர்களை ஆயுதமாகப் பயன்படுத்தி மலிவான அரசிலைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கனடாவில் இப்படியான இசை நிகழ்ச்சிகளை நடத்தி மாவீரர் தினத்தைக் குழப்ப சிறிலங்கா அரசாங்கம் முயல்வதாகக் குற்றஞ்சாட்டும் இக்கூட்டம்தான் உண்மையிலேயே சிறிலங்கா அரசாங்கம் விரும்பும் செயலை தமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருக்கிறார்கள்.ஈழத்தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு சிங்கள அரசு பலவிதங்களில் முயற்சி செய்துவருகிறது. இப்படியான எதிர்ப்புக்கள்மூலம் சிங்கள அரசின் வேலையை இவர்கள் சுலபமாக்குகிறார்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire