vendredi 5 octobre 2012

குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கைது


பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கிளோரியா மக்கபகல் அறோயோ ஊழல் குற்றச்சாட்டில் வியாழக்கிழமை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இவர் தற்காலிகமாக வைத்தியசாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

தனது பதவிக்கால பிற்பகுதியில்  8.8 மில்லியன் டொலர் லொத்தர் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவரைக் கைதுசெய்யுமாறு  பிலிப்பைன்ஸின் ஊழலுக்கு எதிரான நீதிமன்றம் உத்தரவிட்டது.  

கழுத்து வலிக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், அங்கு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து இவரை வைத்தியசாலையில் தங்கவைப்பதா அல்லது சிறைச்சாலையில் வைப்பதாவென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனக்குப் பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி பெனிக்னோ அகூய்னோ III, தன் மீது அரசியல் பழிவாங்கலை மேற்கொள்வதாக பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கிளோரியா மக்கபகல் அறோயோ குற்றஞ்சாட்டியுள்ளார். பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி தனது 9 வருட பதவிக்காலத்தில் ஊழல் செய்ததாக பின்னைய ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார். (என்.டி.ரிவி)

Aucun commentaire:

Enregistrer un commentaire