mercredi 3 octobre 2012

சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்ட்டம் நடத்துவார்கள் - ரணில் எச்சரிக்கை


சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்ட்டம் நடத்துவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலுவுத் திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பளத்தை அதிகரிக்காத அரசாங்கம் நாட்டின் பொருட்கள் சேவைகளின் விலையை உயர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் வாழ்க்கை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களினதும் விலைகள் உயர்வடைந்துள்ளன எனவும், இதனை அமைச்சரவையில் அங்கம் வகிப்போரைத் தவிர ஏனைய அனைவரும் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் கடன் தொல்லையில் அல்லலுறுவதாகத் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கள் பாரியளவில்  போராட்டங்களை நடத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் உயர்த்தப்பட வேண்டுமென்பதனை அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire