கடந்தகால மோதல்களுக்குக் காரணமான பிரச்சினைகளுக்கு, சிறிலங்கா அரசாங்கம் காலதாமதமின்றி அரசியல்தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, போருக்கு பிந்திய சிறிலங்காவின் நிலைமைகள் குறித்தும் ஐ.நாவுடனான ஒத்துழைப்புக் குறித்தும் பான் கீ மூன் கேட்டறிந்து கொண்டார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம், மீள்குடியேற்றம் ஆகியன குறித்தும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் ஐ.நா பொதுச்செயலர் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கடந்தகால மோதல்களுக்குக் காரணமான பிரச்சினைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் காலதாமதமின்றி அரசியல் தீர்வு ஒன்றைக் கண்டறிய வேண்டும் என்று பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் பங்கு கொண்டார். இதற்கிடையே, நேற்று ஐ,நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். |
mercredi 3 octobre 2012
சிறிலங்கா அரசியல்தீர்வு காண வேண்டும் - பீரிசுக்கு பான் கீ மூன் அழுத்தம்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire