மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு (வேடர்குடியிருப்பு ) பிரதேசத்தில்; முடக்கொடிப் பகுதியில் கடந்த வருடம் திறக்க இருந்த புதிய மதுபானசாலை மீண்டும் திறப்பதைக் கண்டித்து இன்று காலை மட்டு-கல்முனை ஆரையம்பதி பிரதான வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.சுமார் 9500 குடும்பங்களையும் 32000 அங்கத்தவர்களையும் 21 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் கொண்டுள்ள மண்முனைப்பற்று பிரதேசத்தில் ஏற்கனவே ஐந்து மதுபானசாலைகள் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் புதிய மதுபானசாலையைத் திறந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் காரியத்துக்குத் துணைபோக வேண்டாம், எமது மக்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மதுப்பாவனையால் ஒரு கிராமசேவையாளர் பிரிவில் சராசரியாக 75 பேர்வரை கணவன் விட்டுச்சென்ற பெண்கள் வாழ்கின்றார்கள்.இதனால் நாளாந்தம் மதுவுக்கு அடிமையாகி சமூக ,பொருளாதார ,கலாசார சீரழிவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளது .இவ்வாறான நிலையில் இன்னுமோர் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கி வரலாற்றுத் துரோகத்தை இழைக்காதீர், எமது பிரதேச மாணவர்களின் கல்விச் சீரழிவுக்கு வித்திடாதீர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire