samedi 2 mars 2013

நாம் மேலும் தவறுகள் செய்யலாம். ஆனால்.நம் அமெரிக்கா செயல்பாடுகள் உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது


உலகத்தின் மீது நாம் ஆதிக்கம் செலுத்தாமல் அதனுடன் ஒன்றி ணைத்து பணிபுரிய வேண்டும் என அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலாளர் சக் ஹேகல் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் இழுபறிக்கு பின்னர் பாதுகாப்புச் செயலாளராக தெரிவான ஹேகல் கடந்த புதன்கிழமை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் பணிபுரிபவர்களுக்கு உரையாற்றினார். தனது 15 நிமிட உரையில் அவர் அமெரிக்க தனது புதிய மற்றும் பழைய கூட்டணிகளுடன் நெருங்கிய உறவை பேண வேண்டும். என வலியுறுத்தினார். இதன்போது அவர் கூறியதாவது:-
நாம் உலகின் பலம் மிக்க நாடாக இருக்கிறோம். அந்த பலத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதே முக்கியம். நாம் மற்ற நாடுகளுக்கு உத்தரவிட முடியாது. நட்பு நாடுகளுடன் இணைத்து, தலைமை ஏற்று செயல்பட வேண்டும். அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் இதனை தனியாகச் செய்ய முடியாது. மற்ற நாடுகளை நாம் புத்திசாலித்தனமாக வழிநடத்த வேண்டும். நமது நாட்டிற்காகவோ, நமது நட்பு நாடுகளுக்காகவோ வளங்களைப் பயன்படுத்தும்போது புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நாம் தவறுகளைச் செய்துள்ளோம். நாம் மேலும் தவறுகள் செய்யலாம். ஆனால் நம் செயல்பாடுகள் அனைத்தும் நன்மையை மனதில் கொண்டே இருக்க வேண்டும். இதை நாம் மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டார்

Aucun commentaire:

Enregistrer un commentaire