mercredi 22 août 2012

மீண்டும் ஒரு யுத்தத்தை சம்பந்தன் உருவாக்கிறார்!


மகிந்தானந்த அளுத்கமகே கண்டுபிடிப்பு

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்கள் துயரப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம் பந்தனும் அக்கட்சியினரதும் தேவையாகும் என்று அமைச்சர் மஹிந் தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இவ்வாறானதொரு நிலைமை காணப்பட்டாலேயே புலம்பெயர் தமிழர்களின் பெருந்தொகைப் பணம் மாதாந்தம் இவர்களுக்கு கிடைக்கும். எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பெற்றிருந்த நிம் மதியான அபிவிருத்தி மிகுந்த ஆட்சியினை பாதுகாக்க கிழக்குத் தமிழ்மக்கள் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தமிழில் உரை யாற்றினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை பேணி பாது காப்பதனையே இலக்காகக் கொண்டு செயற் பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச் சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கட்சியை வெற்றி பெறச் செய்வதனை விடுத்து, தனது பதவியை பாதுகாத்துக்கொள்ள ரணில் முயற்சித்துள்ளார். தற்போது ஐக்கியத் தேசி யக்கட்சி என்று ஒன்று கிடையாது. கட்சி நான் காக பிளவடைந்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கைகளி லேயே ரணில் இருக்கின்றார். ஒற்றைக் காலில் நிற்குமாறு பணித்தால் ரணில் ஒற்றைக் காலில் நிற்பார். குளிக்க வேண்டாம் என்றால் குளிக்க மாட்டார். ரணிலை இயக்கும் ரிமோட் கொன்றோல் ஜனாதிபதியிடம் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire