vendredi 3 août 2012

நாம் தமிழர் கட்சியை நடத்தும் தலைவர் சீமான் திருமணம் செய்துகொள்வது ஆங்கிலச் செய்திகளை வாசிக்கும் ஊடகவியலாளர்.


பிரபாகரன் திருமண நாளான அக்டோபர் 1-ம் நாள் என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார் !
ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.  பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள் ? என்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு கூசாமல் பொயுரைத்துள்ளார் சீமான் என்றால் நம்புவீர்களா ?
சரி சீமான் உண்மை சொல்கிறாரா இல்லையா என்பதனை எவ்வாறு அறிய முடியும் ? முதலில் ஒரு யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். தற்போது ஜூலை மாதம் முடிவில் உள்ளோம். ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர் 1ம் திகதி என்று பார்த்தால் 60 நாட்களே உள்ளது. இந்த 60 நாட்களில் சீமான் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடிகப்போகிறாராம். ஆனால் அது யார் என்று அவருக்கே தெரியாதாம் ! நாம் தமிழர் கட்சியை நடத்தும் தலைவர் அவர் ! ஒரு மாநாடு நடக்க 3 மாதங்களுக்கு முன்னரே பிளான் போடும் அவர் தனது வாழ்க்கை துணை யார் என்று தெரியாது, ஆனால் அக்டோபர் 1ம் தேதி கல்யாணம் என்று சொல்கிறாரே நம்பக்கூடிய வகையிலா இது இருக்கிறது ?
வன்னியில் புலிகள் பலமாக இருந்தவேளை புலிகளின் ஊடகவியலாளராக இருந்த அழகான பெண் யாழ்மதி. இவர் குறிப்பாக ஆங்கிலச் செய்திகளை வாசிக்கும் ஊடகவியலாளர். சீமான் முதன்முதலாக இந்தப் பெண்ணை வன்னியில்தான் சந்தித்து இருந்தார். திரைப்படப் பிடிப்பு சம்பந்தமாக புலிகளுக்கு பாடம் எடுக்க சென்றவர், இந்த அழகான பெண்ணை கண்டு மயங்கி இருந்தார். தமிழ் தேசியத்தின் பெயரால் புலிப் பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்புகின்றார் என்று இவர் தலைவர் பிரபாகரனுக்கு சொன்னார். ஆனால் குறிப்பிட்ட அப் பெண்ணை பிறிதொருவர் திருமணம் முடிக்க இருப்பதாக தலைவர் தெரிவித்து, அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அப் பெண் யாரும் இல்லை, புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அலெக்ஸ் என்னும் அன்புமணி காதலித்தவர் ஆவார். பின்னர் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் நான்கே மாதத்தில் அலெக்ஸ் மற்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் விமானத் தாக்குதலில் இறந்தனர். பின்னர் 2009ம் ஆண்டு யாழ்மதி இராணுவத்திடம் சரணடைந்தார்.
இவர் இவர் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை எப்படியோ மோப்பம்பிடித்த சீமான், இலங்கையில் உள்ள துணை ஆயுதக் குழு ஒன்றுக்கு பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக கொடுத்து அன்புமணியின் முன்னாள் மனைவியான அழகான பெண்ணை(யாழ்மதியை) சிறையில் இருந்து மீட்டு இருக்கின்றார் சீமான். இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கின்றார். சீமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அன்புமணியின் முன்னாள் மனைவி எவ்வித குறைகளும் இல்லாதபடி பார்க்கப்பட்டார். தற்போது தமிழ் நாட்டில் மறைவாக வைக்கப்பட்டிருக்கும் இப் பெண்ணுக்கும் சீமானுக்கும் அக்டோபர் 1ம் திகதி திருமணமாக உள்ளது ! அதாவது ஒரு விதவைக்கு மறு வாழ்வு கொடுப்பது பாவம் என்று நாம் கூறவில்லை. இல்லையேல் ஒரு போராளியை இவர் காப்பாற்றியது தொடர்பாக நாம் விமர்சனம் தெரிவிக்கவில்லை. ஆனால் சீமான் தான் இன்னும் மணப் பெண்ணை பார்க்கவே இல்லை என்று ஏன் பொய்யுரைக்க வேண்டும் ? குறைந்த பட்சம் தான் ஒரு ஈழப் பெண்ணை தான் மணம் முடிக்க இருப்பதாக ஏன் அறிவிக்கவில்லை ? இதனைக் கூட துணிவாக அறிவிக்க வக்கில்லாத சீமான் எவ்வாறு தமிழீழத்துக்காகப் போராடப்போகிறார் ?
எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்கப்போகிறார் ? அன்புமனியின் மனைவியை மணப்பது நல்ல விடையம் ! ஆனால் அதனை அவரால் ஏன் நேர்மையாகத் தெரிவிக்க முடியவில்லை ? வாய் கிழிய கத்தும் அவர், இதனை மட்டும் ஏன் ஒரு கேவலமாக நினைக்கிறார் ? பெண் விடுதலை அவ்வளவு தானா ? இவ்வளவு நாளும் இவர் பேசிய வீர வசனங்கள் எல்லாம் பொய் தானா ? இனி ஈழத் தமிழர்கள் சீமானை எப்படி நம்புவது ?  ஒரு கருணாநிதி, ஒரு சுபவீரபாண்டியன், ஒரு தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி நபர்கள், இவர்களைப் போல ஒரு உயிர் இல்லாத அரசியல் ஜடம் போல அல்லவா சீமான் மாறிவிட்டார் ? உலகத் தமிழர்கள் எவ்வாறு இதனை ஏற்றுக்கொள்வார்கள் ? தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசி  அரசியல் செய்வதும், பின்னர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் நிலையில் தானா இன்னும் இருக்கிறார்கள் ? நாங்கள் இலங்கையில் அப்படியே செத்து மடிவதை தவிர வேறு வழியே இல்லையா ? இது தான் எங்கள் இனத்தின் சாபக்கேடா ? நாங்கள் எங்கள் உயிருக்கும் மேலாக நம்பியிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளே எங்களை அழிக்க உதவுவதா ? எங்கள் கண்ணில் மண்ணை வாரிப் போடுவதா ?
அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால், தலைவர் நிராகரித்த பெண்ணை, தலைவர் மணம் முடித்த நாளில் மணம் முடித்து தேசிய தலைவர் முகத்தில் கரியைப் பூசுகிறார் சீமான் !
இப்படியே ஆண்டாண்டு காலமாக நாம் ஏமாற்றப்பட்டு படுகுழியில் நாம் போவதா ?

Aucun commentaire:

Enregistrer un commentaire