dimanche 12 août 2012

கிழக்கில் பள்ளிவாசல் தீக்கிரை : வன்முறையை ஊக்கப்படுத்தும் அரசியல் வாதிகள்

உன்னிச்சைக் கிராமத்தைச் சேர்ந்த பெண் கோடரியினால் நேற்று மாலை வெட்டித் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து உன்னிச்சைக் கிராமத்தில் 03 வீடுகள், ஒரு கடை ,பள்ளிவாயல் என்பன தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீடு நேற்று சுமார் 12.30 மணிக்குப் பிறகு முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பெண் வளர்த்து வந்த ஆடுகளுக்கும் எரியூடடப்பட்டுள்ளதாகவும் இதேவேளை உன்னிச்சை முஹ்யித்தீன் ஜூம்மாப் பள்ளிவாயலுக்கும் இரவோடு இரவாக தீ வைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளியின் முன்பகுதி முற்றாக எரிந்துள்ளதாகவும் மேலும் ஏனைய பகுதிகள்; சேதமடைந்துள்ளதாகவும் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்துல் கபூர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்

உன்னிச்சை முஹ்யித்தீன் ஜூம்மாப் பள்ளிவாயல் எரிந்து கொண்டிருந்த போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ்.டீ.எஃப்.) ஸ்தலத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளதாகவும் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்துல் கபூர் மேலும் தெரிவித்தார்.

தற்போது பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு உன்னிச்சைப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் வன்செயலின் காரணமாக இடம்பெயரந்து மீண்டும் உன்னிச்சைப் பிரதேசத்திற்கு மீளக்குடியேறியுள்ளமையை இவர்களால் பொறுக்க இயலாமல் இவ்வாறான அடாவடித்தனங்கள் மேற்கொள்;;ளப்பட்டு வருவதாகவும் இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்துல் கபூர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire