samedi 11 août 2012

டெசோ மாநாட்டின் பிரதான நோக்கம், வடக்கு, கிழக்கை தனிநாடாக உருவாக்குவதே - ஜாதிக ஹெல உறுமய

டெசோ மாநாட்டின் பிரதான நோக்கம், வடக்கு கிழக்கை தனிநாடாக உருவாக்குவதே -  ஜாதிக ஹெல உறுமய
திராவிட முன்னேற்றக்கழகம் ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டின் பிரதான நோக்கம், வடக்கு, கிழக்கை தனிநாடாக உருவாக்குவதே என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்தியா இன்னும் அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஈழம் அல்லது அதற்கு ஈடான மாநாட்டை நடத்தக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதிக்கு, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஈழம் அல்லது அதற்கு ஈடான ஆதரவு வழங்கும் மாநாட்டை நடத்துவது சட்டத்திற்கு விரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire