mardi 7 août 2012

வலுவடையும் உலகப் போர் சிரியாவை நோக்கி ரஷ்யப் போர்க் கப்பல்கள் :


சிரியாவில் அரச படைகளுக்கும் அமரிக்க – நேட்டோ பின்னணியில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் ரஷியா 3 போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்களுக்கான ஆயுதங்கள், தொலைத் தொடர்பு மற்றும் பண உதவிகளை அதிகரிக்கும் என வெளிப்படையாக அமரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் இந்தக் மூன்று பாரிய யுத்தக் கப்பல்களை ரஷ்யா அனுப்பிவைத்துள்ளது.
120 ஆயுதம் தரித்த கடற்படையினருடன் சிரியா நோக்கிச் செல்லும் இந்தக் கப்பல் மூன்று நாட்களுக்குள் சிரியாவை அடைந்துவிடும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அமரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோப்படைகளதும் ஆக்கிரமிப்பு யுத்தம் மூன்றாம் உலக யுத்தம் ஒன்றிற்கு வழிவகுகலாம் என பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
மக்களின் நலன்களோடு எந்த வகையிலும் தொடர்பற்ற இந்த நாடுகளின் ஆதிக்கப்போட்டி மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire