lundi 13 octobre 2014

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அகிம்சை போராட்டம் தொடங்க இன்னும் சுமார் 80 நாட்களே உண்டு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு இவ்வாண்டு ஆவணி மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் வவுனியாவில் கூடியது.இம்மாநாடு பற்றி அதிகூடிய செய்திகளை தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் வழங்கிய வண்ணம் இருந்தன. புகலிடத்திலும் இந்த மாநாடு குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப் புக்கள் பரப்பப் பட்டன.விரால் இல்லா குளத்தில் குறட்டையே அதிகாரி என்பது போல் இப்போதெல்லாம் வேலுப்பிள்ளை மகனுடைய மாவீரர் தின உரையில்லாத காரணத்தால் இந்த மாநாட்டுக்கெல்லாம் மவுசு கூடிவிட்டது. முன்பெல்லாம் பிரபாகரனின் மாவீரர் தின உரையை இந்த ஊடகங்கள் காத்துக்கிடந்ததுண்டு. தலைவர் மீசையுடன் வருவாரா மீசையின்றி வருவாரா என்பதை வைத்தே அடுத்த ஆண்டில் போர் மீளத்தொடங்கும் அன்றில் அமைதி உருவாகும் என்று கணிப்பிட்டு கூறிய அரசியல் ஞானிகள் பலர் இப்போது விலாசமே இல்லாமல் போய்விட்டார்கள்.எப்படியோ 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களை பிடித்த சனியன் தொலைந்து போனபின்னர் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தமது ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக ளையும் தமிழரசு கட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமே தமிழரசு கட்சியின் தற்போதைய மூலதனமாக மாறியுள்ளது.அந்த மூலதனத்தை அடிப்படையாக கொண்டே 2010 பாராளுமன்ற தேர்தலில் இறுதி யுத்தத்தின் அழிவுகளுக்கு காரண மானவர்களை பழிவாங்குவோம் என தமிழ் மக்களுக்கு உறுதி வழங்கி 14 ஆசனங்களை இந்த தமிழரசுகட்சி பெற்றுக்கொண்டது. 2012 கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரின் ஒற்றுமையை சர்வதேசத்துக்கு காட்டுவோம் என்று ஏமாற்று வித்தை காட்டி 11 ஆசனங்களை தமிழரசு கட்சி வென்று கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி ஆகியது. 2013ம் ஆண்டு வடக்கு மாகாணசபை தேர்தலிலோ ஆளுனரையும் மாற்றி இராணுவ த்தையும் வெளியேற்று வோம் என தம்பட்டம் அடித்து 30 ஆசனங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால்தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகளில் எந்த ஒன்றையும் இதுவரையில் தமிழரசு கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் தான் தொடர்ந்தும் மக்களுக்கு ஏதாவது சொல்லியாக வேண்டிய நிலையில் நடத்தி முடிக்கப்ப ட்டிருக்கிறது தமிழரசு கட்சியின் இந்த 15வது மாநாடு.இந்த மாநாட்டில் 15 முக்கிய தீர்மானங்களை தமிழரசு கட்சி வெளியிட்டுள்ளது.அதில் முதலாவது தீர்மானம் பின்வருமாறு அமைந்துள்ளது.எமது இனத்தின் சுயநிர்ணய அடிப்படையிலே, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு - கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தின் மூலம்- வென்றெடுக்கப்படும் வரை போரா டுவோம் என்று எமது மக்களுக்கு உறுதி கூறுகின்றது.அத்தோடு இந்த சாத்வீக போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மூன்று மாதகால கெடு அரசாங்கத்துக்கு வழங்குவதாக கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா அந்த மாநாட்டிலேயே அறிவித்தார்..அடுத்த மூன்று மாதத்து க்குள் அதாவது இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அடக்கு முறை நடவடிக்கைகளை நிறுத்தி நிலைமையைச் சீர்செய்வதற்கு இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுமானால் அடக்குமுறை நடவடி க்கைகள் தொடருமானால் தைத் திங்கள் முதலாம் திகதி தொடக்கம் தமிழர் தாயகம் எங்கும் அஹிம்சைப் போரா ட்டம் தொடர்ந்து கட்டவிழும். அரசுக்குரிய காலக்கெடு தாண்டுமானால் தமிழரசு கட்சியின் அகிம்சை போராட்டம் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றவாறெல்லாம் மனுஷன் பேசி வருகின்றார். அண்மையில் மட்டக்களப்பில் அவருக்கு நடந்த வரவேற்பு நிகழ்விலும் இதே பேச்சுத்தான் களைகட்டியது. அப்படி பார்த்தால் இந்த போராட்டம் வெடிக்க இன்னும் சுமார் 80 தினங்களே உண்டு.ஒரு வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியின் 15 வது மாநாட்டில் மேற்கோள் ளப்பட்ட தீர்மானமாக இது இருப்பதால் யாரும் இதை விளையா ட்டாக எடுத்து கொள்ள கூடாது.எனவே இது சும்மா அவ்வப்போது தமிழரசு கட்சியினர் பேசுகின்ற சர்வதேசம் பார்த்து கொண்டி ருக்கும் கதையோ அன்றி வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் புலுடாவொ, அன்றி ஆளுனரை மாற்றிவிடும் மந்திர வித்தைகளோ போல் இல்லை என்பது புலனாகின்றது. எனவே வடக்குகிழக்கு வாழ் மக்கள் அகிம்சை போராட்டத்துக்கு தெருவில் இறங்க வேண்டிய திகதி அண்மித்துக்கொண்டே இருக்கின்றது. அதற்கு முன்னர் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டி ருக்கும் கோரிக்கை பற்றி கொஞ்சம் கருசனை கொள்வோம். சுயநிர்ணய உரிமை,ஐக்கிய இலங்கை,வடக்கு கிழக்கு இணைந்த தன்னாட்சி அதிகார அரசு இவை சுருக்க மாக நமக்கு கூறுவதென்ன? ஒரு தௌ¤வான அதிகார பகிர்வு மிக்க தீர்வு. அதனடிப்படையில் முதலில் இந்த கோரிக்கையானது கீழ்வரும் முடிவுகளுக்கு இட்டு செல்கிறது.அ)அதிகார பரவலாக்க முறையான மாகாணசபையை இந்தகோரிக்கை நிராகரிக்கின்றது.ஆ)இலங்கையின் ஒற்றையாட்சி தத்து வத்தை இந்த கோரிக்கை நிராகரிக்கின்றது.மாகாணசபை முறைமை ஒற்றையாட்சி முறையின்கீழ் இயங்குவது ஆகும். ஆனால் தமிழரசு கட்சி கோருகின்ற ஐக்கிய இலங்கைக்குள்ளான அரசு என்பது ஒற்றையாட்சி முறையின்கீழ் சாத்தியமாக முடியாதது. எனவே அது ஐக்கிய அமேரிக்காபோல் அல்லது ஐக்கிய இராச்சியம் போல் பல அரசுகளின் கூட்டாக ஒன்றியமாக மட்டுமே சாத்தியமானது. சுயநிர்ணயம் என்பது எந்த வேளையிலும் பிரிந்து செல்ல கூடிய உரிமையுடனான இணைப்பு ஆகும்.ஆகவே இந்த கோரிக்கைகளை முன்வத்தி ருப்பதன் ஊடாக இன்றுவரை தமிழரசு கட்சியானது தாம் கடைப் பிடித்து வரும் சில அரசியல் நடவடிக் கைகள் மீதான கேள்விகளை தமக்குள் ளேயே எழுப்பியிரு க்கின்றது.அதாவது இலங்கையின் ஒற்றையாட்சி முறையையும் ஒருமைப் பாட்டையும் இறைமையையும் பாது காக்கும் பொருட்டு இயங்குகின்ற பாராளுமன்றத்தை இனிமேல் ஏற்று கொள்ள முடியாது.அதேபோல அதிகார பகிர்வுக்கு மாற்றான அதிகார பரவலாக்க முறையை முன்மொ ழிகின்ற  மாகாண சபையை இனிமேல் நிராகரிக்க வேண்டும். ஒற்றையா ட்சியின் கீழ் இயங்குகின்ற அமைச்சுக்களால் கட்டுபடு த்தப்படும் உள்ளுராட்சி சபைகள் அதாவது பிரதேச சபைகளை குப்பை தொட்டிக ளுக்குள் வீசப்பட வேண்டியவை. என்கின்ற முடிவுகளை நோக்கி தமிழரசு கட்சி மாநாட்டு தீர்மானங்கள் மக்களிடம் விரிகின்றன. இவைபற்றியெல்லாம் இனி மீளாய்வு செய்வதற்கு காலமும் போதாது.எண்ணி எண்பது நாட்களே மீதமுண்டு.ஆகவே தமிழ் மக்களின் பெயரால் அவர்களின் ஆணையின் பெயரால் பதவி சுகம் அனுபவிக்கின்ற பிரதேச சபை உறுப்பினர்களே! மாகாணசபை உறுப்பினர்களே! வடமாகாண அமைச்சர் களே முதலமைச்சர் சாட்சாத் விக்கிய வர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே! உங்களனைவருக்கும் ஐயோ கேடு. இதுவரை நீங்கள் பாக்கியவான்களாக இருந்தீர்கள்.ஆனால் இப்போது போரா ட்டம் வெடிக்க காத்திருக்கிறது. இலங்கையின் ஒற்றை ஆட்சியை பாதுகாப்போம் என்று நீங்கள் செய்த சத்திய பிரமாணங்கள் அனைத்தையும் நீங்களே நிராகரிக்கும் காலம் நெருங்கி வருகின்றது. உங்கள் இராஜினாமா கடிதங்களை தயார் செய்யுங்கள்.மறந்துவிடவேண்டாம். எண்ணி இன்னும் எண்பதுநாட்களே மீதமுண்டு.        மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்                                                                                                

Aucun commentaire:

Enregistrer un commentaire