
ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இந்த அரசு வணிக வரித்துறையில் காலியாக உள்ள, 182 இடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அதில், விண்ணப்பதாரர்களுக்கு நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. அதுயாதெனில், வணிக வரித்துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர், புகையிலை சுவைப்பவர்கள் மற்றும் சிகரெட் பிடிப்பவர்களாக இருக்கக் கூடாது. இந்த பழக்கம் உள்ளவர்கள், விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில், மாநில அரசு பணி வேண்டு வோர், புகையிலை சுவைப்பதில்லை மற்றும் சிகரெட் பிடிப்பதில்லை என்ற உறுதிமொழியை, விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் வழங்க வேண்டும். அதில், கையெழுத்திட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை, படிப்படியாக புகையிலை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும், குறிப்பாக, அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் இதுபோன்ற பழக்கங்கள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தக் கடுமையான விதிமுறைகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக, அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire