mercredi 1 octobre 2014

யாழ்ப்பாண காதலர்களின் திடுக்கிடும் பதிவுகள்

Dath-lovesயாழ்ப்பாணத்து இளைஞர்கள் காதலில் தோல்வியுற்று கயிற்றில் தொங்கும் கலாசாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஒரு வருடம் மட்டும் நான்கு பேர் இவ்வாறு மரணித்த சம்பவம் நெஞ்சை ஒரு தடவை உறைய வைத்துள்ளது.
ஆண் பிள்ளை வேண்டும் என்று  ஈன்றெடுத்த பெற்றோர்களை விட்டுவிட்டு, உற்றார், உறவினர்களை அழ வைத்து விட்டு எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முட்டாள் ஆண்கள் இருக்கும் வரை தவம் இருந்து பெற்றெடுத்த பெற்றோர்கள் காலம் முழுவதும் கண்ணீருடன் வாழ்வதுதான் இறுதியானதாகின்றது.
ஏனெனில், ஆண் பிள்ளை பெற்றெடுத்து விட்டோம். நம் காலம் வரை கவலையின்றி வாழலாம் என்ற நினைப்பு அனைத்துப் பெற்றோர்களிடத்திலும் வருவது இயல்பு. இவ்வாறான பெற்றோர்களின் கனவுகளை மண்ணாக்கி விட்டு மரணிக்கின்றனர் இவ் இளைஞர்கள்.
இதிலும் இந்த இளைஞர்கள் யாருக்காக இறந்தார்களோ, அந்தப் பெண்கள் தற்போது ஒரு சுதந்திரமான வாழ்வை அனுபவித்து வருகின்றனர். தமது குடும்பத்தினருடன், சகோதரர்களுடன் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இவை அத்தனையும் தனது குடும்பத்தைத் தலைகுனிய வைத்து விட்டு, நடுத்தெருவில் விட்டு விட்டு இறந்து போன இளைஞர்களுக்குத் தெரியுமா? ஓ… மரணிக்கும் யாழ். காதலன்களே மீண்டுவந்து பாரும் உம் காதலிகளை. அவர்களின் வாழ்க்கையை. இவளுக்காகவா நான் இறந்தேன் என்ற நினைப்பு நிச்சயம் வரும். என்ன செய்வது, போன உயிர் மீண்டு வருவதென்றால் இப் ”மி தாங்குமா?

Aucun commentaire:

Enregistrer un commentaire