mardi 30 septembre 2014

யார் கொடுப்பது? ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு செலவு ரூ. 5 கோடி:

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்த செலவை யார்? எப்படிக் கொடுப்பது என்பதுதான் இப்போதைய கேள்வி. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் போடப்பட்ட வழக்கு 2004ஆம் ஆண்டு பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

Aucun commentaire:

Enregistrer un commentaire