samedi 27 septembre 2014

வருமானத்துக்கு மீறிய குற்றவாளி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு தீர்ப்பு

வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
தனது 1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், இன்று ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தத் தகவலை சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங் சில ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார். பின்னணி
ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவரது வருமானத்துக்கு மீறி, சுமார் 66.65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் இன்று சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.
ஜெயலலிதாவுடன் சேர்த்து அவரது தோழி சசிகலாவும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனும் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.
தற்போது பாஜகவில் இருக்கும் சுப்ரமணிய சாமியின் புகாரை அடுத்து, தமிழக ஊழல் ஒழிப்புத் துறையால் போடப்பட்ட இந்த வழக்கு, தமிழக நீதிமன்றத்திலிருந்து , திமுக பொதுச்செயலர் அன்பழகனின் வழக்கை அடுத்து 2003ல் பெங்களூருக்கு மாற்றப்பட்டது.   இந்த குற்றவாழி பணம் கொடுத்து தப்புவதற்காகவே அம்மா உணவம்.அம்மா தியட்டர் அம்மா  என்ற பெயருடன் அத்தனை வேலைகளும் தமிழ் நாட்டில் அரங்கேறுகின்றன என்ற அச்சம் மக்கள் மத்தியில் துலிர் விடும் நாள் நெரிங்கி விட்டதாகவே தோன்றியுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire