samedi 27 septembre 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் நான் வென்றுள்ளதையும் பார்த்து ஜெயலலிதா மகிழ்ச்சியடைய வேண்டும்; சுப்பிரமணியன் சுவாமி

இந்த தண்டனைக்காக ஜெ. மகிழ்ச்சியடைய வேண்டும்:  சுப்பிரமணியன் சுவாமிடிவிட்டரில் சில நாட்களுக்கு முன்பே, ஜெயலலிதாவுக்கு சிறை என்று டிவிட் செய்தவர் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி. இதற்காக அவர் மீது அவதூறு வழக்கு ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே பத்திரிகைகளில் அளித்த பேட்டிக்காகவும் சுப்பிரமணியன் சுவாமி மீது ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மதியம் 1.46 மணியளவில், சுப்பிரமணியன் சுவாமி ஒரு டிவிட் செய்துள்ளார். அதிலும் ஜெயில் ஃபார் ஜெயலலிதா=ஜெ.ஜெ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்த தகவல் வெளிவராத அந்த நேரத்தில் இதுபோன்ற ஒரு டிவிட்டை வெளியிட்டு அதிமுகவினரை சீண்டி பார்த்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. மற்ற சில டிவிட்டுகளில், 14.06.1996ம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்தேன். அதன்பிறகு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அதை அரசு சார்பில் நடத்த அனுமதி கேட்டார். நானும் அனுமதியளித்தேன். இப்போது வழக்கு தீர்ப்பால் கிடைக்கும் பெயரை கருணாநிதி பெற முயலுவார். 2ஜி வழக்கில் எனது வழக்கு வெற்றி பெற்றால் அப்போது ஜெயலலிதா மகிழ்ச்சியடைவார். அதேபோல, சொத்துக்குவிப்பு வழக்கில் நான் வென்றுள்ளதையும் பார்த்து ஜெயலலிதா மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறு டிவிட் செய்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire