lundi 29 septembre 2014

கோபாலசாமியின் அமெரிக்க கனவு பலித்தது மகிந்தவும் மோடியும் சந்திப்பு

ஐநா பொதுச்சபை கூட்டத் தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சினேகபூர்வ சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, இருநாட்டு நலன்கள் சார் விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாகவும், இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்தின் இணையதளம் கூறியுள்ளது.
வடக்கு மாகாணசபைக்கு இலங்கை அரசாங்கம் செய்துவரும் நிதியுதவிகள் குறித்தும், ஒன்றரை பில்லியன் ரூபா நிதி இதற்காக இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ நரேந்திர மோடியிடம் விளக்கமளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மீனவர் பிரச்சனை தொடர்பில் பேசிய இருநாட்டுத் தலைவர்களும், இந்தப் பிரச்சனையை மிகக் கவனமாக கையாள்வதற்கு இணங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, ஜெனிவாவிலுள்ள ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு அளித்துவரும் ஆதரவுக்காகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காகவும் மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு நன்றி கூறியதாகவும் இலங்கை அரசாங்கத்தின் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
'நாம் சேர்ந்திருக்க வேண்டும், அதனால் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்' என்று நரேந்திர மோடி கூறியதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire