samedi 11 octobre 2014

கோத்தாபய ராஜபக்ஷ வழிநடாத்தி செயற்படுத்திய வீட்டுத்திட்டம்

Sewana_Housingகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிர்மாணித்து வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தின்கீழ் கொழும்பு வெள்ளவத்தை மயூரா பிளேசில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘லக்முத்துசெவன’ 118 வீடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 800 மில்லியன் ரூபா செலவில் 118 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு வீடும் 500 சதுர அடிகொண்ட, தொடர்மாடி வீடமைப்பு திட்டமாகும்.
இத் திட்டத்தை வழிநடாத்தி செயற்படுத்திய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோத்தாபய ராஜபக்ஷ அவர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 70 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வேலைத் திட்டத்தினை அரசாங்கம் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதில் 26 வீடமைப்புத் தொகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந் நிகழ்வில் அமைச்சர்களான தினேஷ்குணவர்தன, ஜீவன் குமாரண துங்க, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஊடக மேற்பார்வை ஏ.எச்.எம். அஸ்வர், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானால, வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் நிமல் பெரேரா உள்ளிட்ட முக்கியஸ்தர் பலர் கலந்து கொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire