lundi 6 octobre 2014

பல ஆண்டுகளாக தத்துவ அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் சிந்திக்க வைத்த ஒரு கேள்விக்கு விடை

மருத்துவத்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, மூன்று நரம்பியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜான் ஒ கீஃப், மே-பிரிட் மோசர் மற்றும் எட்வர்ட் மோசர் ஆகியோர், தனிநபர்களின் இருப்பிடத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நகர்வுகளைச் செய்யக் காரணமான மூளைச் செல்களின் கட்டமைப்பைக் கண்டறிந்துள்ளதற்காக வழங்கப்படுவதாக பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தனிநபரும் தமது இருப்பிடத்தை புரிந்துகொண்டு, சிக்கலான ஒரு சூழலில் எவ்வாறு நகர்வுகளை மேற்கொள்கிறார்கள் என்பதை மூளையிலுள்ள அந்த செல்களே முடிவு செய்கின்றன என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தூள்ளனர்.
ஜான் ஒ கீஃப் அவர்கள் ஒரு பிரிட்டிஷ்-அமெரிக்க ஆராய்ச்சியாளர். மோசர் தம்பதியினர் நார்வேயைச் சேர்ந்தவர்கள்.
அல்சைமர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூளை அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் தமது சுற்றுச்சூலை உணர்ந்து கொள்ள முடியவில்லை என்பதை இவர்களது ஆராய்ச்சியின் மூலம் புரிந்து கொள்ள வழி ஏற்படும்.
பல ஆண்டுகளாக தத்துவ அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் சிந்திக்க வைத்த ஒரு கேள்விக்கு இவர்களது இந்தக் கண்டுபிடிப்பு, விடையளித்துள்ளது என்று நோபல் சபை தெரிவித்துள்ளது.மூளை நாள்
இதைப் பொதுமக்களிடம் அறிவுறுத்தும் வகையில் உலக நரம்பியல் கழகம் ஜூலை 22-ம் தேதியை உலக மூளை தினமாக அறிவித்துள்ளது.
இந்த முதல் உலக மூளை தினத்தின் மையக் கருத்து ‘நமது மூளை; நமது எதிர்காலம்’. இதை வரைந்து மூளையைப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொருவரும் மூளையைப் பாதுகாக்கக்கூடிய சில நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire