vendredi 3 octobre 2014

இலங்கையில் சீனா நீர்மூழ்கி

மக்கள் விடுதலை இராணுவ கடற்படை (PLAN)  நீர்மூழ்கி செப்டம்பர் மாத தொடக்கத்தில் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு வருகை தந்தது என்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. இதுவே சீனாவின் முதலாவது இவ்வளவு வெளிப்படையான  நாடு கடந்த துறைமுகப்படுத்தலாகும்.
இந்து சமுத்திரத்தின் பிரசன்னத்திற்கான முதலாவது நீர்மூழ்கியை சீனா  அனுப்பியது -
ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியா கடற்பகுதியில், கடற்கொள்ளைகளிற்கு எதிர் நடவடிக்கையாக இது அமையும் என சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.  இலங்கைக்கான வருகையானது, மற்றைய சர்வதேச கடற்படைகள் தூர தேச இறங்குதுறைகளில் நிறுத்திச் செல்வதை நடைமுறையில் வைத்திருப்பது போல இதுவும் ஒரு  வழக்கமான நடைமுறையாகவே அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நீர்மூழ்கியானது 329 என இலக்கமிடப்பட்ட வகை 039 வகுப்பை சேர்ந்த டீசல் மின்விசைப்படகு ஆகும். 2006 ஆம் ஆண்டு இதன் கட்டுமாணம் நிறைவடைந்து சரிபார்க்கும் நிலையிலிருந்த போதே இது பற்றி IHS Janes இனால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஹைனன் தீவில் இருக்கும் யூளின்-சனியா நீர்மூழ்கி தளத்தில் நிலைகொண்டுள்ள 32 ஆவது நீர்மூழ்கிப்படகுத் தொகுதியினால் இது பயன்படுத்தப்பட, மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் அவதானிகள் ஆலோசனை தெரிவிக்கிறார்கள். இந்த நீர்மூழ்கியானது, நீர்மூழ்கி வகை 925 உடைய Changxingdao (861) இனது ஆதரவுடன் சேர்ந்து இயங்குகிறது.

இது நீண்ட தூரத்திற்கு இயங்க வேண்டும் – அதாவது ஹைனனிலிருந்து ஏடன் வளைகுடா வரையான  தூரம்  5,500 கடல் மைல்கள் வரையாகும். அதனால் வெளியே சென்று திரும்ப மூன்று வாரங்களுக்கு மேலாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

மற்றைய நாட்டு கடற்படைகள், புலனாய்வு தகவல் சேகரிப்பதற்கும்  உளவு வேலைகளிற்குமாக நீர்மூழ்கிகளை தமது கடற்கொள்ளைகளிற்கான எதிர் நடவடிக்கையில் பயன்படுத்துகிறது. இதில் 2010 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த Dutch Walrus-class SSK HNLMS Zeeleeuw என்பதே முதலாவதாக பதிவு செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து ஏடன் வளைகுடாவில், கடற் கொள்ளைகளிற்கான எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சீனா இதில் நீர்மூழ்கிகளை ஈடுபடுத்துவதை இப்போது ஆரம்பித்துவிட்டது.

வூகன் எனப்படும் 052B ரக நாசகாரி, கைகு எனப்படும் 052 C ரக நாசகாரி மற்றும் வூசி வகை கப்பலான உணவு, ஆயுதம், எரிபொருள், உதிரிப்பாகங்கள் போன்றவற்றை வழங்கல் செய்யக்கூடிய கப்பல் என்பன இதில் ஈடுபடுத்தப்படுகின்றன.  

நான்கு மாதத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் மக்கள் விடுதலை இராணுவ கடற்படையினர் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்படுவர். மக்கள் விடுதலை இராணுவ கடற்படையினரின் 17 ஆவது உதவிப்படை தற்போது பணியிலுள்ளது. சங்சுன் என்ற 052C ரக நாசகாரி, சங்சோ என்ற 054A  ரக நாசகாரி (இது  20 புரட்டாதி 2014,ஈரானிலுள்ள பண்டார் அபாஸ் என்ற இடத்தில், இரு நாடுகளிற்குமிடையிலான கடல் உறவுகளை ஆழப்படுத்தும் நோக்குடன் தரித்து நின்றது) போன்றனவும் தரித்துள்ளது.    
 
வியாக்யானம்

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சீனாவின் கப்பல்கள், தமது கடற்கலங்கள் எரிபொருள் நிரப்பி தங்கிச் செல்லக்கூடிய ஜிபூட்டி, ஓமான், யேமன் உட்பட்ட பல நாடுகளிற்கு விஜயம் செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மார்கழி மாதம் தொடங்கிய இந்நடவடிக்கைகளில் மாஹே, சீசெல்லஸ் போன்ற தீவுகளிலுள்ள வசதிகளையும், மீள்நிரப்புவதற்காகவும் தங்கிச் செல்வதற்காகவும் பயன்படுத்த எண்ணியிருந்தது.   

சீனாவின் இலங்கைக்கான இவ்வாறான விஜயம் குறித்து இந்தியா பெரிதாக எதிர்வினை ஆற்றாவிட்டாலும் இந்தியா இது குறித்து கவனிக்காமல் இருக்காது. ஏனெனில் இந்திய, சீன படைகள் சர்ச்சைக்குரிய இமாலய எல்லையில் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் அதே சமயத்திலேயே சீனாவின்  இலங்கைக்கான இவ்வாறான விஜயம் அமைந்துள்ளது.

வெளிநாடுகளில், குறிப்பாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது கடற்படைத்தளங்களை நிறுவுவதை சீனா தனது நீண்டகால இலட்சியமாக கொண்டுள்ளது. கடல் எல்லைத்தொடர்களில் நிலையெடுக்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளிற்கான வழங்கல்கள் மற்றும் விநியோக வசதிகளை பெறுவதற்கு கொழும்பு சீனாவிற்கு தேவை என்பது தெளிவாகின்றது.

உண்மையில், பாக்கிஸ்தான் மற்றும் மியான்மரில் செய்துள்ளது போல், இலங்கையில் சீனா அபிவிருத்தி செய்த இரண்டு துறைமுகங்களில் ஒன்றையே சீனா தனக்கான வசதிக்காக பயன்படுத்துகின்றமையானது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் கடல் கட்டுமாணத்தின் வலிமை பற்றிய விவாதத்தை உறுதிசெய்து விடுகிறது.

நீர்மூழ்கி துறைமுகப்படுத்தியமைக்கு சற்றுப் பின்னர் சீன சனாதிபதியான சி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்து, கடல் சார்ந்த சீனாவின் பட்டுப்பாதை ஸ்தாபிக்கப்படுவதை ஊக்குவித்தார். அத்துடன் சீனா துறைமுகங்களை அபிவிருத்தி செய்து கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றமையை சர்வதேச வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கான அணுகுமுறை என சிலர் கூறுகையில், ஏனையோர் அதனை தொலைநோக்கான மூலோபாயத்தை கொண்ட நடவடிக்கை என்கிறார்கள்.       நன்றி குளோபல்

Aucun commentaire:

Enregistrer un commentaire