lundi 6 octobre 2014

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களைத் தாக்கும் வல்லமையுடைய அணுசக்தி ஏவுகணையை சீனா பரிசோதனை

சுமார் 10,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் மேம்படுத்தப்பட்ட அணுசக்தி ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டாங்ஃபெங்-31B என்ற இந்த ஏவுகணை முக்கால்வாசி அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களைத் தாக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணையை சீனாவின் தேசிய நாளான அக்டோபர் 1ஆம் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு சீன ராணுவம் பரிசோதனை செய்தது.
அதாவது செப்டம்பர் 25ஆம் தேதி வூசாய் ஏவுகணை மற்றும் விண்வெளி பரிசோதனை மையத்தில் இந்த பயங்கர அணுசக்தி ஏவுகணையை அறிமுகம் செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளை மேற்கோள் காட்டி சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்பு டாங்ஃபெங் 31-ஏ என்று இருந்த கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவம் இது என்று சீன ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மியின் முன்னாள் மேஜர் சூ குவாங்யூ இது பற்றி கூறுகையில், “தீவிர ராணுவ ஆயுதங்களை சீனா சோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, தற்போது ஆசிய பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா அமைத்துள்ள புதிய கூட்டணி சீனாவுக்கு நல்லதல்ல.
மேலும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா தனது 60% ராணுவப் படையை நிறுத்தப்போகிறது இதனால் சீனாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.” என்று 

Aucun commentaire:

Enregistrer un commentaire