samedi 2 mars 2013

பாலச்சந்திரன் போட்டோ: கடந்த ஆண்டு இந்த போட்டோ கிடைக்கலையா? அப்படியானால் அதை ஏன் கடந்த ஆண்டே வெளியிடவில்லை என்று கேட்பது கடும் துரோகமாக


கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. அதையடுத்து அந்த தீர்மானம் வெற்றி பெற்றது.
இப்போது மீண்டும் சேனல்-4 தொலைக்காட்சி, ‘நோ பயர் ஸோன்’ என்ற தலைப்பில், இயக்குனர் கல்லம் மெக்ரேயைக் கொண்டு போர்க்குற்ற ஆவணப்படம் ஒன்றை மீண்டும் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், உயிருடன் இருக்கும் போட்டோ உள்ளது.
இதே சேனல்-4வால், இதே பாலச்சந்திரன் உயிரிழந்த நிலையில் உள்ள போட்டோக்களை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு உயிருடன் உள்ள போட்டோவின் வந்திருக்கிறது. இந்த போட்டோவும் கடந்த ஆண்டு உங்களிடம் இருந்ததா? அப்படியானால் அதை ஏன் கடந்த ஆண்டே வெளியிடவில்லை என்று கேட்பது கடும் துரோகமாக கருதப்படும்.
இந்த போட்டோ வெளியிடப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு மற்றொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருகிறது. இதுவும் வெற்றிபெறும்.
அடுத்த ஆண்டு, மற்றொரு போட்டோ வெளியிடப்படும். மீண்டும் ஒரு தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்படும். அதுவும் வெற்றி பெறும்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்ற தீர்மானத்தால் என்ன நடந்தது? யாருக்காவது தெரிந்தால் எமக்கு அறியத் தரவும். இந்த ஆண்டு தீர்மானத்தால் நடந்த மாற்றங்கள் பற்றி அடுத்த ஆண்டு எமக்கு அறியத் தரவும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire