dimanche 3 mars 2013

யுத்தம் செய்வதை விடவும் கடினமானது! இனங்களை ஒருமைப்படுத்துவது

‘மாத்தறை பௌத்தர்களின் முக்கிய கேந்திரஸ்தலமாகும். இன்று இந்த வேலைத்திட்டத்தின் மூலமாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒற்றுமைச் செய்தியை முழு இலங்கைக்கும் கொண்டு செல்ல முடியும். இன்று நாம் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக மதவாதத்தை, இனவாதத்தைக் கட்டியெழுப்பும் தீய சக்திகள் பற்றி அறிந்து வருகிறோம். அதற்குத் தீர்வாக இன்று நாளும் நிச்சயம் திகழும்.

ஒருவகையில் இந்நிகழ்வானது, மக்களின் சிந்தனைகளை வெளியுலகிற்குக் கொண்டுவரும் நிகழ்வாகும். வழிகாட்டலுடன் கூடிய இசைக் குறியீடாக இதனை நான் காண்கிறேன். இனங்களை ஒருமைப்படுத்துவதென்பது யுத்தம் செய்வதை விடவும் கடினமானது’ என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

இனங்களிடையில் ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கில் ‘பாட்டுப் பாடுவோம், கயமு கீ’ எனும் இறுவட்டு வெளியீட்டு விழா மாத்தறை கலாசார நிலையத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இனங்களிடையில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் ‘பாட்டுப் பாடுவோம், கயமு கீ’ இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாத்தறை கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

பிரபல இசையமைப்பாளர் ரம்ஸி முஹம்மதின் சிந்தனையின் வெளிப்பாடாக வெளிவந்துள்ள இந்த இறுவட்டு, பழைய சிங்களப் பாடல்களிலுள்ள இசைகளுக்கு தமிழ்ப்பாடல்களையும், தமிழ்ப் பாடல்களுக்குரிய இசையமைப்பில் சிங்களப் பாடல்களையும் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire