dimanche 3 mars 2013

சுப்பிரமணியம் சாமி ;தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன்

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி, திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத் தின் மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

சந்திப்பின்போது அவர், ’’நான் ராஜபக்‌ஷவை சந்தித்து வந்தேன். தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சிக்காக நான் ராஜபக்‌ஷவை வலியுறுத்தி வருகிறேன். அது என்னால்தான் முடியும். 

வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது. ராஜபக்‌ஷவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் நான் வாங்கித் தருவேன்’’ என்றார்

Aucun commentaire:

Enregistrer un commentaire