dimanche 3 mars 2013

ரணில் அழைப்பு முழுநேர அரசியல்வாதிகளுக்கு


முழுநேர அரசியல்வாதிகளுக்கு ரணில் அழைப்பு
மக்களோடு மக்களாக இருந்து தொழிற்படுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பு என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

கட்சியின் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அந்தந்த பிரிவுகளில் அவர்களது பிரதேச மக்களுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறு செய்ய முடியாதவர்கள் இருப்பார்களாயின் அவர்களை விலக்கி விட்டு மக்களோடு மக்களாக இருந்து தொழிற்படக் கூடியவர்களை அவ்விடங்களில் நியமிப்பதற்கு என்னால் முடியும் எனவும் ரணில் குறிப்பிட்டார். 

பகுதிநேர, ஒப்பந்தத்தில் வேலை செய்பவர்கள் எனக்கு தேவையில்லை, முழுநேரமாக கடமை புரிபவர்களே எனக்கு தேவை என எதிர்க் கட்சித் தலைவர் குறிப்பிட்டார். 

கண்டியில் இன்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire