dimanche 7 juillet 2013

புத்தகாயவிள் வெங்காயம் ஆகிய பகவான்

 இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் அமைந்துள்ள ''புத்தகாயா'' பௌத்த வழிபாட்டிடத்தில் ஞாயிறன்று அதிகாலை 8 குண்டுகள் வெடித்துள்ளன.
நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் நடத்தப்பட்டுள்ளதாக வர்ணிக்கப்படும் இந்தத் தாக்குதலில் எவரும் பலியாகவில்லை என்றும், அங்கிருக்கும் போதி மரத்துக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
அந்த பௌத்த ஆலய வளாகத்தில் உள்ள இரு கோயில்களில் தலா 4 குண்டுகள் வெடித்ததாக அங்கிருக்கும் இலங்கையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். ஆயினும் இலங்கையர்கள் எவரும் இந்த குண்டு வெடிப்புக்களில் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.ஒரு திபெத்தியரும், ஒரு பர்மா மதகுருவும் இந்த தாக்குதலில் காயமடைந்திருக்கிறார்கள்.
குண்டு வெடிப்புக்கள் ஞாயிறன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.45 மணிக்கு நடந்ததாகவும், இப்படியான தாக்குதல்களுக்கான மிரட்டல்கள் ஏற்கனவே வந்திருந்ததாகவும், ஆயினும் இந்த தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இதுவரை தெளிவாகவில்லை என்றும் இலங்கையைச் சேர்ந்த அந்த மதகுரு பிபிசிக்கு தெரிவித்தார்.
புத்தகாயாவின் பாதுகாப்பு குறித்து தற்போது ஒரு முக்கிய கூட்டம் நடைபெறுவதாகவும் அந்த மதகுரு தெரிவித்துள்ளார்.இலங்கை, ஜப்பான், பர்மா ஆகிய இடங்களில் இருந்து வருடாந்தம் புத்தகாயாவுக்கு அதிகமாக யாத்ரிகர்கள் வருவது வழக்கம்.
அந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு தொடர்புகொண்டு நிலைமை குறித்து விசாரித்ததாகவும், தனது அதிர்ச்சியை அவர் வெளியிட்டதாகவும் அங்கிருக்கும் மதகுரு தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலை அடுத்து இந்தியாவில் சென்னை உட்பட 8 முக்கிய இடங்களில் பௌத்த வழிபாட்டிடங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


சுரேஷ் ஸ்கந்தராஜா என்பவருக்கு அமெரிக்க நியுயோர்க் நீதிமன்றம் ஒன்று 15 வருட காலச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

எல்.ரி.ரி.ஈ னருக்கு, கனேடிய இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைத் பெற்றுக் கொடுத்தமை தொடர்பான குற்றத்தை ஒப்புக் கொண்ட சுரேஷ் ஸ்கந்தராஜா என்பவருக்கு அமெரிக்க நியுயோர்க் நீதிமன்றம் ஒன்று 15 வருட காலச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது இது தொடர்பில் கனடாவின் "நெஷனல் போஸ்ட்" வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த நபர் எல்.ரி.ரி.ஈ னருக்கு விமானங்களுக்கான உதிரிப்பாகங்கள், சப்மெரின் மற்றும் கனேடிய நவீன தொழில் நுட்பக் கருவிகள் போன்றனவற்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கில் ஆறு பேர் சந்தேக நபர்களாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவரே சுரேஷ் ஸ்கந்தராஜா என்பவராவார். இவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனையடுத்தே இவருக்கு நியுயோர்க் நீதிமன்றம் ஒன்று 15 வருடச் சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

8 வயது சிறுமியை கொன்று சுவரில் புதைப்பு சிவகங்கையில் கொடூரம்

சிவகங்கை : சிவகங்கையில் சிறுமியை கொடூரமாக கொன்று சுவரில் வைத்து பூசிய சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (36). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார். இவரது மனைவி உஷா (30) பூ வியாபாரம் செய்கிறார். இவர்களுக்கு அஜய் (14) என்ற மகனும், அக்ஷயா (8) என்ற மகளும் உள்ளனர். அக்ஷயா மனநிலை குன்றியவர். தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தார். கடந்த 4ம் தேதி மாலை வெளியே சென்ற அக்ஷயாவை காணவில்லை. இது குறித்து அவரது தாய் உஷா சிவகங்கை டவுன் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.அக்ஷயா வீட்டின் அருகே ஒரு அமைப்பின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த அலுவலகத்திற்குள் சென்று பார்த்தனர். அப்போது சமையல் அறையில் வாஷ்பேசின் கீழே உள்ள பகுதியில் புதிதாக சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த சுவரில் இருந்து ரத்தம் வெளியேறிய வண்ணம் இருந்தது. இதையடுத்து சுவர் இடிக்கப்பட்ட போது, உள்ளே ஒரு சாக்கு பையில்  சிறுமியின் பிணம் இருந்தது. 

அது அக்ஷயா என அவரது தாய் அடையாளம் காட்டினார். இதனை தொடர்ந்து சிறுமியின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியை அந்த அலுவலகத்தில் தங்கியிருந்த அமல்ராஜ் (34) என்பவர் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். அமல்ராஜை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

அமல்ராஜ் மீது சந்தேகம் வந்தது ஏன்?

ராமநாதபுரம் மாவட்டம், பாண்டுகுடியை சேர்ந்தவர் அமல்ராஜ். உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க நிர்வாகிகளிடம் ஏழை என கூறி அவர் அந்த அலுவலகத்தில் தங்கி வந்தார். கேட்டரிங் தெரிந்ததால் அலுவலகம் முன்பாக சூப், பிரியாணி போன்ற உணவு வகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். ஜட்டியுடன் வெளி இடங்களில் திரிவது போன்ற விநோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரது நடவடிக்கை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க அலுவலகத்தில் இருந்து நிறுத்தப்பட்டார். 

நிர்வாகிகள் அலுவலகத்தை பூட்டி விட்டு சாவியை அருகில் உள்ள வீட்டில் கொடுத்து வைத்திருந்தனர். ஏற்கனவே உள்ள பழக்கத்தை பயன்படுத்தி சாவியை வாங்கி அமல்ராஜ் அந்த அலுவலகத்தில் தங்கி வந்துள்ளார். அக்ஷயா காணாமல் போன அன்று அருகில் இருந்தவர்கள் அந்த அலுவலகத்தில் தேட சென்றுள்ளனர். 
அப்போது நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகே அமல்ராஜ் அவர்களை அனுமதித்துள்ளார். சரியாக தேடாததால் அக்ஷயாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அந்த அலுவலகத்தில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியதும், நேற்று முன்தினத்தில் இருந்து அமல்ராஜ் தலைமறைவானார்.

எனது வாழ்வில் நான் செய்த முட்டாள் தனமான செயல்’தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டது;ரெமிடியாஸ்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டது எனது வாழ்வில் நான் செய்த முட்டாள் தனமான செயல்’ என முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தமரணியுமான முடியப்பு றெமிறிடியஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மல்லாகத்தில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.மாநகர சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். அன்றில் இருந்து யாழ்.மாநகர சபையில் உள்ள
கூட்டமைப்பில் 8 மந்தைகளையும் மேய்பததில் நான் பெரும் பாடுபட்டு வந்தேன்.
மக்களிற்கு நல்லவிடயங்களைச் செய்வதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. எதற்;கெடுத்தாலும் அதனை எதிர்ப்பது தான் இவர்களின் வேலையாக போய்விட்டது.
எனது வாழ்நாளில் நான் செய்த முட்டாள் தனமாக செயற்பாடு நான் கூட்டமைப்பில் போட்டி போட்டதுதான. அதனால் தான் 2010 ஆம் ஆண்டியில் இருந்து அவர்களின் செயற்பாட்டில் இருந்து நான் மாநகர சபையில் தனித்து செயற்பட ஆரம்பித்தேன்.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பிரச்னையைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை.
எங்கள் பிரச்சனையை யாருடன் பேசித்தீர்க்க வேண்டும் யாருடன் கதை;தால் அது முடியும் என்ற நிலையில் தான் இன்று கூட்டமைப்பில் அரசியல் போய்க் கொண்டிருக்கிறது.
இலங்கை பிரச்சனைக்கு ஐ.நா மன்றத்தால் ஒன்றும் செய்து விடமுடியாது. இது கூட்டமைப்புக்கு ஏன் விளங்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. அண்மையில் யாழிற்கு விஜயம் செய்த இந்திய குழு தமிழ் மக்களின் விடயத்தில் நீங்கள் அரசாங்கத்துடன் பேசியே தீர்வு காணவேண்டும். இந்தியா இங்கு ஒரு நெருக்கமான உறவைப் பேணிக்கொள்ள விரும்புகி;னறது.
இது யாழப்பாணத்துடன் அல்ல இலங்கையுடன் தான் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் மக்களிடம் என்ன விடயத்தினைச் சொல்லி வாக்கு கேட்கப்போகிறார்கள் என்று எமக்குத் தெரியும். சர்வதேசம் எம்மோடு நிக்கிறது. மக்கள் ஆணைவழங்கி அதனை நீரூபிக்கவேண்டும் என்பதே இவர்களி பிரச்சாரப்பொருளாக இருக்கப்போகிறது.
அழிந்து போன எங்கள் பூமியை வளமானதான மாற்ற வேண்டும் என்றால் மக்கள் சரியானவற்றை செய்யவேண்டும். அவ்வாறு நீங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் ஒரு வளம் நிறைந்த பிரதேசமாக வடக்கை மாற்றிக்காட்டுவோம்’ என்று அவர் தெரிவித்தார்.

நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் பள்ளி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ஆசிரியர் உள்பட 30 பேர் பலி

நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் பள்ளி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ஆசிரியர் உள்பட 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதில் அனைவரும் அரசு பள்ளியில் தங்கி படித்தவர்கள் ஆவர். இது போல் பள்ளிகளை குறி வைத்து தாக்குவது இங்குள்ள பயங்கரவாதிகளுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரத்து 600 பேர் உயிர் தப்பினர். யோப் மாகாணம் மமுடோ டவுண் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு பலரும் தங்கி படித்து வந்தனர். அதிகாலை நைஜீரிய நேரப்படி 3 மணிக்கு பயங்கரவாதிகள் இந்த பள்ளிக்கு வந்து துப்பாக்கியால் சுட்டனர் .தொடர்ந்து பள்ளி கட்டடத்திற்கு தீ வைத்தனர். இதில் ஒரு ஆங்கில ஆசிரியர் மற்றும் 29 குழந்தைகள் உயிரிழந்தனர், சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை . தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாத குறைபாடே இது போன்ற தாக்குதலுக்கு காரணம் என இப்பகுதியினர் கூறினர்.
கடந்த 2010 முதல் நைஜீரியாவில் ஏற்பட்ட தாக்குதலில் இதுவரை ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

samedi 6 juillet 2013

கலவரத்தில் 30 பேர் பலி எகிப்தில்

எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ள முகமது முர்ஸியின் ஆதரவாளர்கள் சனிக்கிழமையும் தமது ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று உறுதிபட அறிவித்துள்ளனர்.
இராணுவத்தால் அதிபர் முர்ஸி ஆட்சியகற்றப்பட்டது, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் மூத்த தலைவர்கள் கைதுசெய்யப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து வெள்ளியன்றும் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் அவரை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் வெள்ளியன்று ஏற்பட்ட கலவரத்தில் நாடெங்கிலும் பார்க்க முப்பது பேர் கொல்லப்பட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.
கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் வெள்ளியிரவு நெடுநேரம் வரை மோதல்கள் நீடித்திருந்தன. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களையும் கண்ணாடி பாட்டில்களையும் வீசித் தாக்கிக்கொண்டனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முர்ஸியை எதிர்க்கும் தரப்பினர் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கு உறுயதிளித்திருந்தார் 13 பிளஸ் என்ற அதிகார பரவலாக்கத்தை;திஸ்ஸ விதாரண

ஜனாதிபதி 13 பிளஸ்  அதிகார பரவலாக்கத்தை வழங்குவதாக இந்தியாவுக்கு உறுயதிளித்திருந்தார் - திஸ்ஸ விதாரணஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13வது அரசியல் அமைப்புத் திருத்ததிற்கு அப்பால் சென்று 13 பிளஸ் என்ற அதிகார பரவலாக்கத்தை வழங்குவதாக இந்தியாவுக்கு உறுதிளித்திருந்தாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பான செய்திகள் பல ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகியதாகவும் அதனை ஜனாதிபதி மறுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
சர்வக்கட்சி குழுவில் தாம் பணியாற்றிய போது, அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாக தற்காலிக அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது 13 பிளஸ் என்ற அதிகாரத்தை பரவலாக்கும் யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி இதன் போது கூறியதாகவும் திஸ்ஸ வித்தாரண மேலும் தெரிவித்துள்ளார். 

டெல்லி விஜயம் – கொழும்பு டெல்லி உறவில் முனேற்றம்

BASIL_KHURSHIநேற்று வெள்ளிக்கிழமை (05/07/13) ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சா அவர்கள் இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்தார். வடமாகாண  தேர்தல் அறிவிக்க ப்பட்டமை தொடர்பில் இந்திய அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், வடக்கில் நடக்கும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பாகவும் திருப்தி தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு செல்லவேண்டும் என்ற தமது கருத்தையும் வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா இந்திய உறவில் ஏற்பட்டிருக்கும் முனேற்றம் எதிர் வரும் செப்டம்பர் இல் நடைபெற இருக்கும் ஐகிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடரிலும் , அதனை தொடர்ந்து நவம்பர் இல் நடைபெற இருக்கும் பொதுநலவாய தலைவர்களின் மகாநாட்டிலும், இந்திய அரசு ஸ்ரீ லங்காவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் முதல் படி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐந்து பங்காளி கட்சிகளும் தேர்தல் ஆசனங்களை எப்படி பகிர்ந்து கொள்ளுவது , யார் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவது, கிடைக்கும் நிதியை பகிர்ந்து கொள்ள குழுக்கள் அமைப்பது போன்ற விடயங்களில்   காட்டும் ஆர்வம் நீண்ட கால தமிழ் பேசும் மக்களின் நலன்கள் தொடர்பில் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வலுவடைந்து வருகின்றது.

சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்கமாட்டேன்;சிறிகரன்

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்கமாட்டேன்’ என யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘நீண்டகால அரசியல் அனுபவமும், ஆயுதம் தூக்காத மாறாத கொள்கையுடன் அகிம்சை பேராட்டத்தை நடத்திய அனுபவமும் தூரநோக்குச் சிந்தனை, செயல்திறன், பேச்சாற்றல், கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
அவ்வாறு நிறுத்தாதவிடின் நான் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் எதிர்பார்க்கலாம்!எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்

யாழ்தேவி தொடருந்து எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன் கிளிநொச்சி வரை தனது பயணத்தை மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருட இறுதிக்குள் யாழ்தேவி தொடருந்து தனது சேவைகளை யாழ்ப்பாணம் வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட பகுதிக்கான தொடருந்து பாதையை அமைக்கும், பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது.

இந்த தொடருந்து பாதை நிர்மாணிக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு மற்றும் வடக்கு இடையிலான உறவுகள் மேன்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்

vendredi 5 juillet 2013

ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கிய முன்னாள் கடற்படை வீரரான விஜேமுனி

இலங்கை முப்பது ஆண்டுகால போரை வெற்றிக் கொண்டுள்ளதால், இந்தியாவின் முன்னால் மண்டியிடும் தேவையில்லை என இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படைவீரரான விஜித ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை - இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்த போது, வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையின் போது, ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கிய முன்னாள் கடற்படை வீரரான விஜேமுனி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மாகாண சபை முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் மாகாண சபையை ஏற்படுத்தியவர்களில் எவரும் தற்போது உயிருடன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் தேர்தல் நடத்தப்பட மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட போது, நோர்வே, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகள் ஈழ கோட்பாட்டை அங்கீகரித்தன.
இந்த நிலையில், 15க்கும் மேற்பட்ட நாடுகள் அதனை அங்கீகரித்தால், ஆபத்தான நிலைமை ஏற்படும்.
வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இராணுவம் தாக்கல் நடத்தியதன் காரணமாகவே இந்தியா, இலங்கையில் தலையிட்டு மாகாண சபைகளை ஏற்படுத்தியது என விஜேமுனி கூறியுள்ளார்.

jeudi 4 juillet 2013

சாதிவெறிக்கு பலியான தோழன் இளவரசன் ......தண்டிக்கப்படவேண்டியவர்கள் யார் ? இளவரசனின் மறைவு தற்கொலை என்று சொல்லி விட்டுவிட முடியுமா?......

                       
தர்மபுரி இளவரசன் திடீர் மரணம். ரயில் தண்டவாளத்திலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டிருக்கிறது. இதைச் செய்தியாக வெளியிட்டிருக்கிற ஒரு பத்திரிகை தலைப்பில் “இளவரசன் தற்கொலை” என்று எழுதியிருக்கிறது. ஒரு கேள்விக்குறி கூட இல்லாமல். அது கொலையா, தற்கொலையா என்பதை காவல்துறையின் விசாரணைதானே (அது முறையாக நடத்தப்படுமானால்) உறுதிப்படுத்த வேண்டும். அதற்குள் காவல்துறைக்கு இப்படி அறிக்கை கொடுங்கள் என்று வழிகாட்டுவது போல் செய்தி வெளியிடலாமா?

எதுவாக இருந்தாலும் இளவரசனின் மரணம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. திவ்யாவின் முடிவு குறித்து தனது வலிகளை வெளிப்படுத்திய இளவரசன், தன்னிடம் அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருந்தார் சில நாட்களுக்கு முன்பு. நேற்று (ஜூலை 3) நீதிமன்றத்திற்கு வந்த திவ்யா, தான் இளவரசனுடன் வாழ விரும்பவில்லை என்றும் தாயுடனும் சகோதரியுடனும்தான் வாழ விரும்புவதாகவும் முதலில் தான் சொன்னதைப் பத்திரிகைகள் திரித்துச்சொல்லிவிட்டதாகவும் கூறியதாக இன்று காலை வந்த செய்திகள் தெரிவித்தன, மாலையில் இளவரசனின் மரணச்செய்தி.

பிணவாடை பிடித்துப்போனவர்களாக சிலர் சமூகவலைத்தளங்களில் என்னென்னவோ எழுதத் தொடங்கிவிட்டார்கள். இளவரசனின் மரணத்தை தியாகம் என்றும் வீரமரணம் என்றும் சித்தரிப்பதற்கு ஒரு கூட்டம் கிளம்பிவிடும் என்கிறார் ஒருவர். திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டதை சாதிவெறி என்று கூறியவர்கள் இந்த மரணத்தைப் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறார் இன்னொருவர். முற்போக்கு என்று சொல்லிக்கொண்டு காதல் திருமணத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்றும் ஒருவர் கேட்டிருக்கிறார்,

திவ்யாவின் தந்தை மரணமடைந்ததே சுயமான தற்கொலையா, தூண்டப்பட்ட தற்கொலையா என்று தெளிவாக வேண்டியிருக்கிறது. திவ்யா எடுத்த முடிவின் பின்னணியில் எந்த அளவுக்கு சாதிய சக்திகளின் பலவகையான கெடுபிடி நிர்ப்பந்தங்கள் இருந்தன என்பதும் வெளிச்சத்திற்கு வரவேண்டியிருக்கிறது.

பிரச்சனை இவர்களது காதல் வென்றதா இல்லையா என்பதல்ல. காதலைச் சாக்கிட்டு அரங்கேற்றப்பட்ட சாதிவெறி அரசியலும், அதற்காக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட வன்முறைகளும்தான். தலித் மக்கள் பொருளாதாரத்திலோ, கல்வியிலோ, சமூக மதிப்பிலோ எந்த வகையிலும் தங்களது நிலையை உயர்த்திக்கொள்ள விடமாட்டோம் என்கிற நவீன மனுவாத அடிமைகளின் மூர்க்கம்தான். அந்த சாதிவெறி அரசியலும் வன்முறையும் மனுவாத அடிமைத்தன மூர்க்கமும்தான் கலப்படமே இல்லாமல் சமூகவலைத்தள பரபரப்புப்பதிவாளர்களிடம் எதிரொலிக்கிறது. இளவரசனின் மரணம் இவர்களுடைய மனதில் ஒரு கொண்டாட்ட உற்சாகத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இளவரசனின் மரணத்தால் சமத்துவவாதிகளின் குரல் ஒடுங்கிவிடும் என்றா நினைத்தீர்கள்? சாதியத்தின் சல்லி வேர்களையும் அடிவேரையும் எரித்து அந்தச் சாம்பலை தம் உடலில் பூசிக்கொண்டு பள்ளுப்பாடத்தான் போகிறார்கள் மனிதநேயர்களும் முற்போக்காளர்களும். அந்தச் சாம்பல் குப்பென்று மேலெழும். அதிலே இந்த வக்கிரர்கள் கண்ணைக் கசக்கிக்கொள்ளவும் நேரமில்லாமல் காணாமல்போவார்கள்.

முதலமைச்சரின் கைகளுக்குள் செல்லும் காவற்துறை.பதட்டப்படும் கோத்தபாய ராஜபக்ஷ

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால்,  முதலமைச்சர்களினால் நிர்வகிக்கப்படும் 9 காவற்துறைகள் உருவாகும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த காவற்துறை நிலையங்களில் நேரடியான நிர்வாகம் காவற்துறை மா அதிபரிடம் இருந்து மாகாண முதலமைச்சரின் கைகளுக்குள் செல்லும். முதலமைச்சரின் கீழ், பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர் மாகாண காவற்துறையை நிர்வகிப்பார்.காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு மாகாணத்திற்குள்ளேயே மேற்கொள்ளும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இனரீதியான காவற்துறை நிலையங்கள் உருவாகும்.
அத்துடன் இந்த நிலைமையானது பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் ஆபத்தான நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும். அதேவேளை மாகாண சபையின் காவற்துறைக்கு பொறுப்பாக இருக்கும் பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவரிடம் விசாரணை நடத்த மாகாண முதலமைச்சரிடம் அனுமதிபெற வேண்டும்.
விசாரணையை நடத்துவதா இல்லையா என்பது முதலமைச்சரின் விருப்பத்திற்கு அமையவே நடைபெறும். இதன் மூலம் காவற்துறையினரின் ஒழுக்கம், சட்டத்தை பாதுகாக்கும் பணியின் பிரதான நபரான காவற்துறை மா அதிபரின் அதிகாரம் இல்லாமல் போய்விடும் எனவும் பாதுகாப்புச் செயளலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள பெரும்பான்மை ஆட்சியின் கீழ் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.ஆனால்,தமிழ், முஸ்லிம் பெரும்பான்மை ஆட்சிகள், மாகாணசபைகளில் ஏற்படுவதை நீங்கள் ஏற்றுகொள்ள தயாரில்லை. இது என்ன நியாயம்

manoganesan25- ஹெல உறுமயவுக்கு மனோகணேசன் நேரடி பதில்  இந்த நாடு இங்கு வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனங்களுக்கும் சொந்தமானது. இந்த அடிப்படையை மாற்றி, இந்நாட்டை சிங்கள பெளத்தருக்கு மாத்திரம் சொந்தமான நாடு என மாற்றி அமைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை,  வெளியே இருந்து வந்தவர்கள் என்று கூறிவிட்டு, முழு நாட்டுக்கும் நீங்கள் ஏகபோக உரிமை கோருகின்றீர்கள்.  இது தவறானது. வெவ்வேறு  காலகட்டங்களில், வெவ்வேறு பிரிவுகளாக வெளியிலிருந்து வந்த வரலாறு நம் எல்லோருக்கும் ஆங்காங்கே வரலாற்றில் இருக்கின்றது. ஆகவே வெளியேற வேண்டுமென்றால் நாம் எல்லோருமே வெளியேற வேண்டும்.  வேடர்களுக்கு நாட்டை கையளித்துவிட்டு நாம் எல்லோரும்  வெளியேற வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று பட்டம் சூட்டி விட்டு முழு நாட்டுக்கும் ஏக போக உரிமை கொண்டாடும் கொள்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்  தெரிவித்தார்.   

நேற்று இரவு பிரபல தனியார் தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சியில் ஜாதிக ஹெல உறுமய ஊடக செயலாளர் நிஷாந்த வணசிங்க, மனித உரிமை சட்டத்தரணி சந்திரபால குமாரகே, கலாநிதி சூர்யா குணசேகர ஆகியோருடன் கலந்துகொண்ட மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் சிங்கள, பெளத்த சகோதரர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருப்பதை நாம் ஒரு பிரச்சினையாக ஒருபோது கருதவில்லை.  நாம் அதை பிரச்சினையாக கருதுவதாக நீங்கள் தவறாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

உங்களது சிங்களம் மாத்திரம் என்ற கொள்கை மறுபுறத்தில் தமிழ் மாத்திரம், முஸ்லிம் மாத்திரம் என்ற கொள்கைகளை உருவாக்கியுள்ளன.  நான் இந்த சிங்களம் மாத்திரம், தமிழ் மாத்திரம், முஸ்லிம் மாத்திரம் என்ற மூன்று கொள்கைகளையும் நிராகரிக்கின்றேன். இலங்கையர் என்ற பொதுவான பயணத்துக்குள், சிங்கள மக்களையும்  இணைத்து கொண்டு பயணிக்க நாம் தயார். ஆனால் சிங்கள மக்களை எம்முடன் இணைத்து கொள்வதை நீங்கள் தடுக்கின்றீர்கள். இதுதான் இன்று இந்த நாட்டில் பிரச்சனை.

நாடு முழுக்க மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட போது, அவற்றில் பங்குபற்றிவிட்டு இன்று வடக்கில் மாகாணசபை உருவாக்கப்படும்போது அதை நீங்கள் எதிர்கின்றீர்கள். அது பிரிவினை என்ற நிசாந்த வணசிங்கவின் கருத்து படு மோசடித்தனமானது. வட மாகாணசபையை நீங்கள் எதிர்க்கும் காரணம் சிறு குழந்தைக்கும் புரிகின்றது.    வடக்கில் இன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். ஆகவே வடக்கின் மாகாணசபை ஆட்சி, தமிழர் பெரும்பான்மை ஆட்சியாக அமைய வாய்ப்பு இருக்கின்றது. இதை உங்களால்  சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நாட்டின் ஏனைய பல்வேறு மாகாணசபைகளின் சிங்கள பெரும்பான்மை ஆட்சியின் கீழ் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், தமிழ், முஸ்லிம் பெரும்பான்மை ஆட்சிகள், மாகாணசபைகளில் ஏற்படுவதை நீங்கள் ஏற்றுகொள்ள தயாரில்லை. இது என்ன நியாயம் ? 

இதற்கு காரணம் இந்த நாடு முழுமையாக சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரமே சொந்தமான நாடு என நீங்கள் நினைக்கின்றீர்கள். இதை நாம் ஏற்றுகொள்ள முடியாது.

அனுபவமிக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கலாநிதி சூர்யா குணசேகர, திருகோணமலையில் சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை தட்டச்சு செய்ய முடியாமல் தான் கஷ்டப்பட்டதாகவும், தமிழர் பெரும்பான்மை  ஆட்சி வடக்கில் ஏற்பட்டால், அங்கு சிங்கள மொழி பாவனையாளர்கள் கஷ்டப்படவேண்டிவரும் என சொல்கிறார். அவரை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கின்றேன். ஆனால் அவரது கருத்து மிகப்பெரிய நகைச்சுவை. மொழி பாவனையில் தமிழர்கள்தான் இந்த நாட்டில் மிகப்பெரும் நடைமுறை கஷ்டங்களை சந்தித்து வருகின்றார்கள். இதுதான் உண்மை.

திருகோணமலை மாவட்டம் ஒரு தமிழ் பேசும் மக்கள்  பெரும்பான்மையாக வாழும் மாவட்டம். அங்கு தமிழ், முஸ்லிம் மக்களின் மொத்த ஜனத்தொகை, சிங்களம் பேசுபவர்களை விட அதிகம். ஆனால், அங்கு திருகோணமலை மாவட்ட செயலகம் என்ற கச்சேரி சிங்கள மொழியில், சிங்கள அதிகாரிகளைகொண்டு நடத்தப்படுகின்றது.

அதேபோல்தான் அம்பாறை மாவட்டத்திலும், தமிழ், முஸ்லிம் மொத்த ஜனத்தொகை சிங்களம் பேசுபவர்களைவிட அதிகம். ஆனால், அம்பாறை கச்சேரி சிங்கள மொழியில், சிங்கள அதிகாரிகளைகொண்டு நடத்தப்படுகின்றது.

வடக்கு, கிழக்குக்கு வெளியே 29 பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ் மொழியும் மேலதிக நிர்வாக மொழியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரகடம் வந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  இதில் தலைநகர் கொழும்பில் உள்ள இரண்டு பிரதேச செயலக பிரிவுகளும் உள்ளடக்கம். இந்த மேலதிக தமிழ் மொழி நிர்வாகம், இந்த 29 பிரதேச செயலக பிரிவுகளில் எங்கே அமுல் செய்யப்படுகின்றது ?

யாழ்ப்பாணத்து போலிஸ் நிலையங்களிலும், சிங்கள அதிகாரிகளை கொண்டு போலிஸ் நிர்வாகம் செய்கின்றீர்கள். தமிழ் போலிஸ் அதிகாரிகளை நியமிக்க, 13ம் திருத்தத்தில் உள்ள போலிஸ் அதிகாரங்களை கோரினால், அது பிரிவினை என்கிறீர்கள்.   

நாடு முழுக்க சிங்களம் படித்து, சிங்கள பெளத்த பெரும்பான்மை ஆட்சியின் கீழ் சத்தமும், இரத்தமும் இல்லாமல் நாம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். இது எப்படி ஐயா சாத்தியம் ?

நந்திக் கடலருகில் கோவணத்துடன்”வாக்குப் பொறுக்குவதற்காக எதையும் பேசத்தயங்காத கும்பல்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் மாவை. சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மிகவும் ஆபத்தான காலத்தில் தமிழ் சமூகம் உள்ள நிலையில் தியாகிகள் தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
TNA-logoஇந்த நிகழ்வில் கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தால் தமிழ் மக்கள் பலம் பெற்றுள்ளனர் என வரிக்கு வரி கூறிய தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெற்று இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதையில் வரிக்கு வரி “பத்மநாபாவைக் கொன்றவர்கள் நந்திக் கடலருகில் கோவணத்துடன்” என்று விழிக்கப்பட்டத்து. வாக்குப் பொறுக்குவதற்காக எதையும் பேசத்தயங்காத இந்தக் கும்பல் நாளை மண்டையன் குழுவைப் புதுப்பித்தாலும் வியப்படைவதற்கில்லை.

mercredi 3 juillet 2013

இயற்கை மருத்துவ முறைகள் தொடர்பில் கற்றுக்கொடுக்க முடியவில்லை.வன வாழ்க்கை தலைவர்

வன வாழ்க்கையை இழந்த எங்களை, கண்காட்சிப் பொருளாக இந்த அரசாங்கம் நடத்தி வருகின்றது. அதனால்,  வன வாழ்க்கையின் பாரம்பரிய விடயங்களை கடைப்பிடிக்க முடியாமல் உள்ளது.
 
தொழில் வாய்ப்புக்களுக்காக நகரங்களுக்குச் செல்லும் வனகுல இளைஞர் யுவதிகள், சிங்களவர்களை திருமணம் செய்துகொள்வதால் ஆதிவாசிகள் பரம்பரையைக் கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவலிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார். 

'ஆதிவாசிகள் பரம்பரையை எதிர்காலத்தில் காணக்கிடைக்காத நிலைமை எதிர்காலத்தில் உருவாகும். தற்போதுள்ள இளைஞர் யுவதிகளுக்கு பரம்பரை பாரம்பரியங்கள் தொடர்பில் விளக்கமளிக்க வழியில்லை. 

காட்டு வாழ்க்கை எமக்கு தடை விதிக்கப்பட்ட வாழ்க்கையாகிவிட்டது. இதனால், எமது எதிர்கால சந்ததியினருக்கு மிருகங்கள் தொடர்பில் கற்பிக்கவும் முடியவில்லை. இயற்கை மருத்துவ முறைகள் தொடர்பில் கற்றுக்கொடுக்க முடியவில்லை. என்று அவர் குறிப்பிட்டார். 

13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்கு அழுத்தம் கொடுப்போம்;ரணில் விக்ரமசிங்க

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்கு அழுத்தம் கொடுப்போம், அதிகாரத்தை பகிர்வதற்காக கைகோர்ப்போம் என்ற தொனிப்பொருளில் கீழ் எதிர்க்ட்சிகளின் எதிர்ப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மகஜரில் கையொப்பமிடும் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த போராட்டம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்றுமாலை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டனர்.

அரசாங்கத்தின முட்டாள்தனமான முடிவு 1983 ஜுலையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை அரசாங்கம் திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது.

பாகிஸ்தான், இஸ்ரேல், பிரித்தானிய சிறப்புப்படை அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வந்து கொடுத்த பயிற்சி மற்றும் வகுத்துக் கொடுத்த தந்திரோபாயத்தினால் தான், 1987ல் வடமராட்சியில் சிறிலங்கா படைகளால் 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையில் வெற்றி பெற முடிந்தது. 

இவ்வாறு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். 

“ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் பருத்தித்துறையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இந்தியா தலையீடு செய்திருக்கா விட்டால், சிறிலங்கா இராணுவத்தினால் யாழ்ப்பாண நகரத்தில் இருந்தும் விடுதலைப் புலிகளை அகற்றியிருக்க முடியும். 

துரதிஸ்டவசமாக நட்புநாடு ஒன்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு மீளஉயிர் கொடுத்தது. 

ஒப்பரேசன் லிபரேசனைத் தொடர ஜே.ஆருக்கு இந்தியா அனுமதி அளித்திருந்தால் அப்போதே எம்மால், தீவிரவாதத்தை அழித்திருக்க முடியும். 

இந்தியா எம்மீது திணித்த உடன்பாடு அவர்களையே போருக்குள் தள்ளிச் சென்றது. 

1983 ஜுலையில் யாழ்ப்பாணத்தில் 13 படையினர் கொல்லப்பட்ட பின்னர், கொழும்பிலும் சுற்றுப்பகுதிகளிலும் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, ஆயிரக்கணக்கான தமிழர்களை அரசாங்கம் திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது. 

அது அரசாங்கத்தின முட்டாள்தனமான முடிவு. அந்தச் சூழலை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர். 

யாழ்ப்பாணத்துக்கு வந்தவர்களை அவர்கள் ஆட்சேர்ப்புச் செய்தனர். 

அவர்களில் பலர் இந்தியாவில் பயிற்சி பெற்று சில மாதங்களிலேயே போருக்குத் தயாராக திரும்பி வந்தனர். 

1985 டிசெம்பர் இரண்டாவது வாரத்தில், பாகிஸ்தான் அதிபர் ஷியா உல் ஹக் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா இராணுவம் உண்மையில் பெரிய சமருக்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது. 

இளம் படையினருக்கு துரிதமாக பயிற்சிகள் அளிக்க வேண்டியிருந்தது. கேணல் விஜய விமலரட்ண ஆணையிடும் அதிகாரமில்லாத அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சித் திட்டம் ஒன்றை ஆரம்பித்தார். 

பாகிஸ்தான் அதிபர் ஷியா உல் ஹக் தலையிட்டு, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பயிற்றுனர்கள் மூலம் அதிகளவில் பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்தார். 

அவர் நாடு திரும்பியதும் சிறப்பு சேவைக் குழுவைச் சேர்ந்த பிரிகேடியர் தாரிக் மெஹ்மூத்தை அனுப்பி வைத்தார். அவர் சாலியபுரவில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகளை வழங்கினார். 

சாலியபுர பயிற்சித் திட்டம், ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மிகச்சிறந்த ஒரு திட்டம் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு கடமைப்பட்டுள்ளோம். 

பாகிஸ்தானின் உதவி கிடைத்திருக்காது போயிருந்தால், அந்த நேரத்தில் பெரிய படை நடவடிக்கைக்குத் தேவையான பயிற்சிகளை எம்மால் பெற்றிருக்க முடியாது. 

கொழும்பிலும் இஸ்லாமாபாத்திலும் அரசாங்கங்கள் மாறிய போதிலும் சிறிலங்காவில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் எப்போதுமே துணையாக நின்றுள்ளது.  பிரிகேடியர் தாரிக் மெஹ்மூத் அடிக்கடி சாலியபுர முகாமுக்கு வந்து, பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்துப்படுவதை உறுதிப்படுத்தினார். 

ஒப்பரேசன் லிபரேசனுக்காக பல நூற்றுக்கணக்கான படையினர் அங்கு பயிற்றுவிக்கப்பட்டனர். 

ரி.எம் என்று அழைக்கப்பட்ட பிரிகேடியர் தாரிக் மெஹ்மூட் 1989 மே 29ம் நாள் விபத்து ஒன்றில் மரணமானார். 

1987 மே 26ம் நாள் ஒப்பரேசன் லிபரேசன் ஆரம்பிக்கப்பட்ட போது. பிரிகேடியர் மெஹ்மூத் பலாலி விமானப்படைத் தளத்துக்கு பறந்து சென்றார். அது சிறிலங்காவின் பாதுகாப்பில் பாகிஸ்தான் கொண்டிருந்த கடப்பாட்டை வெளிப்படுத்தியது. 

குடிசனச் செறிவுள்ள பிரதேசத்தில் போரிடுவது குறித்த பயிற்சிகள் எமக்குத் தேவைப்பட்டன. 

உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து அப்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் அதற்கான பயிற்றுனர்களை அனுப்பி வைத்தது. 

சாலியபுரவில் 1986 தொடக்கத்தில் ஆணையிடும் அதிகாரமில்லா அதிகாரிகள் மற்றும் இளநிலை அதிகாரிகளுக்கு பாகிஸ்தானிய அதிகாரிகள் சிறப்பு பயிற்சிகளை ஆரம்பித்த போது, இஸ்ரேலியர்களும் வந்தனர். 

பாகிஸ்தானிய பயிற்றுனர்கள் சாலியபுரவில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி அளித்தனர். 

அதேவேளை இஸ்ரேலியப் பயிற்சித் திட்டம் மாதுறுஓயாவில் இடம்பெற்றது. 

மேஜர் தரத்திலான அதிகாரிகள், போரிடும் பற்றாலியன்களின் இரண்டாவது கட்டளை அதிகாரிகள், கப்டன்களுக்கு இஸ்ரேலியர்கள் பயிற்சி அளித்தனர். 

அப்போது மேஜராக இருந்த நானும் [கோத்தாபய ராஜபக்ச], சரத் பொன்சேகாவும் மாதுறுஓயாவில் இஸ்ரேலியர்களிடம் பயிற்சி பெற்றோம். 

இஸ்ரேலியர்களின் பயிற்சித் திட்டம், கட்டடப் பிரதேசத்தில் போரிடுதல் [FIBUA –Fighting In Built-Up Areas]என்று அழைக்கப்பட்டது. 

இதற்கு நாம் புதியவர்களாக இருந்தோம். உண்மையான சூட்டுப் பயிற்சியின் போது நிறைய அனுபவங்கள் கிடைத்தன. 

இத்தகைய உண்மையான சூட்டுப்பயிற்சி தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாது போனால், தவறாக முடிந்து போகும். FIBUA பயிற்சியின் போது, மாதுறுஓயாவில் பொறியியல் படைப்பிரிவின் ஒரு அதிகாரி கொல்லப்பட்டார். 

பாகிஸ்தானியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் வழிகாட்டலில் தான், சிறிலங்கா இராணுவம் தீவிரவாதத்துக்கு எதிராக எவ்வாறு போரிடுவது என்று கற்றுக் கொண்டது. 

சாலியபுரவிலும் மாதுறுஓயாவிலும் வழங்கப்பட்ட பயிற்சிகள் எமக்கு நம்பிக்கையை அளித்தன. 

தீவிரவாதத்தை இராணுவ வழிமுறையின் மூலம் ஒடுக்கலாம் என்பதை உணர்ந்தோம். 

உண்மையில், பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேலின் பயிற்சித் திட்டங்கள் தான், ஒப்பரேசன் லிபரேசனின் வெற்றிக்கு காரணம். 

மோதலின் முக்கியமான தருணத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் எமக்கு நம்பிக்கையை அளித்தனர். 

சிறிலங்கா இராணுவம் வெளிநாட்டுப் பயிற்சிகளை பெற்றிருக்காது போனால், நாம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்திருப்போம். 

தீவிரவாதத்தை சிறிலங்கா இராணுவத்தினால் தனது சொந்த முயற்சியால் வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்க முடியாது. 

அப்போதைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன, சனல் தீவை தளமாக கொண்ட மேசினறி குழுவான கினிமினி எனப்படும் கேஎம்எஸ்சின் சேவையை பெற்றார். கேஎம்எஸ் அதிகாரிகள் பரந்துபட்ட சேவைகளை வழங்கினர். 

விமானிகள் பற்றாக்குறையால், வேறு வழியின்றி சிறிலங்கா விமானப்படை கேஎம்எஸ் விமானிகளை வாடகைக்கு அமர்த்தியது. 

சிறிலங்கா இராணுவம் காலாற்படை பயிற்சிகளுக்காக பயிற்றுனர்களை பெற்றது. அவர்கள் பிரித்தானியாவின் சிறப்பு படைப்பிரிவான சிறப்பு வான் சேவைப் படைப்பிரிவில் முன்னர் பணியாற்றியவர்கள். 

தென்னாபிரிக்கர்களும், சில முன்னாள் சோவியத் ஒன்றிய நிபுணர்களும் கூட இருந்தனர். பாகிஸ்தான் இஸ்ரேலிய திட்டங்களுடன் ஒப்பிடும் போது, கேஎம்எஸ்இன் பங்களிப்பு மிகவும் குறைவானது. 
ஆனாலும், அது முக்கியமானது. சில கேஎம்எஸ் அதிகாரிகள் நடவடிக்கைப் பிரதேசத்தை அண்டிய பலாலியில் நிலைகொண்டிருந்தனர். 

சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறிலங்கா விமானப்படை என்பன கேஎம்எஸ்சின் சேவையைப் பெறுவதற்கு முன்னர், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையே கேஎம்எஸ்சின் பயிற்சிகளைப் பெற்றது.”

அண்டார்டிகாவின் 2.7 கிலோ மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டி சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் 5வது பெரிய கண்டமான அண்டார்டிகாவில் 98 சதவிகிதம் பனி படர்ந்துள்ளது.
அங்கு சுமார் 1 மைல் ஆழத்திற்கு படிந்துள்ள பனியால் அப்பகுதியில் மைனஸ் 98 டிகிரி செல்சியசுக்கும் குறைவான அளவில் கடும் குளிர் நிலவுகிறது.
இந்நிலையில் தற்போது அண்டார்டிகாவின் கிழக்கு பகுதியில் உள்ள குக் பகுதியில் பனி நிறைந்த ஏரிகள் பெருமளவில் உருக தொடங்கியுள்ளது.
பாறைகள் மற்றும் பனிப்படலங்களின் அழுத்தத்தால் வெப்பம் அதிகரித்து தண்ணீர் வெளியேறுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 2.7 கிலோ மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டி படலமானது திடீரென சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து ஐரோப்பிய விண்கல ரேடார் அல்டிமீட்டர் கொண்டு ஆராயப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இங்கு வெளியாகும் 6 பில்லியன் டன்கள் நீரானாது தெற்கு பெருங்கடலில் கலந்து வருகிறது.
இதன் காரணமாக கடலில் நீரின் அளவு அதிகரித்து நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

mardi 2 juillet 2013

சம்மந்தனின் அரச ஆதரவு டயலாக். வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா?

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளர் எவரையும் இதுவரையில் தெரிவு செய்யவில்லை என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும் எனவும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண தல்செவன ஹோட்டலுக்கு பிரான்சின் தலைநகர் பாரிசில் சர்வதேச விருது

யாழ்ப்பாணத்தில்  இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் தல்செவன ஹோட்டலுக்கு வர்த்தக முகாமைத்துவம், வியாபார உத்திகள் மற்றும் தரமான பெயர்சூட்டலுக்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது.
பிரான்சின் தலைநகர் பாரிசில்  நடைபெற்ற 17வது “International Star for Leadership in Quality Award”  விருது வழங்கும் விழாவின் போதே இராணுவத்தின் தல்செவன ஹோட்டலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக 118 நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. பாரிசின் அரங்கில் Paris Etoile (Concorde La Fayette), Palais de Congress de Paris  நடைபெற்ற இறுதிச் சுற்றில் விருதுக்குத் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
விருதுக்குப் பொருத்தமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர்குழுவில் 74 நாடுகளைச் சேர்ந்த பொருளாதார மற்றும் வர்த்தக நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
தல்செவன ஹோட்டலுக்கான விருதைப் பெறுவதற்காக அதன் முகாமையாளர் மேஜர் ரிச்சர்ட் விக்கிரமாரச்சி பாரிசுக்குப் பயணமாகியுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

யாழ்.நகர இடங்களில் சிறுநீர் கழித்தால் கைதுசெய்யப்படுவார்கள்

யாழ்.நகரப் பகுதிக்கு வரும் பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் துர்நாற்றம் வீசும் விதமாக யாழ்.மத்திய பேரூந்து நிலையச் சூழலில் சிறுநீர் கழித்து விட்டு செல்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புபொறுப்பதிகாரி விக்கிரமராட்சி தெரிவித்தார்.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை இம்மாதம் முதல் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நியாயம் வழங்க இலங்கை வந்தே தீருவேன்! – நவநீதன் பிள்ளை

இலங்கையின் நிலைமையைக் தன் கண்களால் காண எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதன் பிள்ளை குறிப்பிட்டார்.

அந்தப் பயணத்தின்போது இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினருடன் தான் கலந்தாலோசிக்க எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய வானொலி நிலையத்தின் பிபிஸி உலக சேவை நேற்று முன்தினம் (29) அவருடன் கண்ட செவ்வியின்போதே அவர் இவ்விடயம் பற்றித் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கவுள்ள இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்களால் காணமுடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிபிஸி உலக சேவைக்கு கருத்துரைத்த நவநீதன் பிள்ளை தொடர்ந்து குறிப்பிடும் போது, போரின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச ரீதியில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைச் சரியாக்க் கண்டுபிடித்து அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கட்சிகள் எடுக்காத பகிர‌ங்க முடிவுகள் 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கினால் நான் உடடியாக அரசாங்கத்திலிருந்து விலகுவேன்; வாசுதேவ நாணயக்கார

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு அதை அரசாங்கம் நீக்கினால் நான் உடடியாக அரசாங்கத்திலிருந்து விலகுவேன் என மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாகாணசபை முறைமையை ஒழிப்பது என்பது தவறான விடயம். இதற்கு நான் எப்போது எதிர்ப்பாகவே இருப்பேன். இதேவேளை ஏகாதிபத்தியத்துக்கு நாம் வழிவகுக்கமாட்டோம். எனவே மாகாணங்களுக்குள்ள அதிகாரங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என்றார்.

கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் மு.றெமீடியஸ் சுதந்திரக் கட்சியுடன் இணைந்தார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் மு.றெமீடியஸ் மாநகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து, அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு நகரசபை எல்லைக்குள் அதிகபடியான வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்ட றெமீடியஸ், பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பாடுகளை எற்படுத்திக் கொண்டு கட்சியுடன் தொடர் முரண்பாட்டு நிலையிலிருந்தார்.
இந்நிலையில் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த றெமீடியஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் பகிரங்கமான அறிவித்தலையும் விடுத்திருக்கின்றார்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை தமிழர்களுக்கு எதுவித நன்மையும் செய்யாத நியைலில் அரசுடன் இணைந்து புனர்வாழ்வு, அபிவிருத்தி போன்ற இலக்குகளை அடைய தொடர்ந்தும் உழைப்பேன் எனவும் சத்தமிட்டுள்ளார்.

lundi 1 juillet 2013

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் TNAவிற்கு நாட்டமில்லை : முஹமட் முஸாம்மில்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நாட்டமில்லை என ஜே.என்.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எந்தக் காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளின் போது இதய சுத்தியுடன் பங்கேற்றதில்லை என ஜே.என்.பி.யின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை என வழமை போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் குரலாகவே ஒலித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த நிறைவின் பின்னர் இடம்பெயர் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஒரு சோறுப் பொதியையேனும் வழங்கவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும், தெரிவுக்குழுவின் பணிகளை தொடருமாறு அரசாங்கத்தை கோருவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலைப் போன்று இயங்கி வருகின்றது என குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் கொள்கைகளை தற்போதைய நிர்வாகம் புறந்தள்ளியுள்ளதாகக் குறிப்பி;ட்டுள்ளார். வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதனை தடுக்கும் நேக்கிலேயே அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இன்று ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலாக மாற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் துரத்திய சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு பாகிஸ்தானின் குவேட்டாவில் பயிற்சி

தமிழ்நாட்டின் வெலிங்டன் பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில், பயிற்சியைத் தொடரமுடியாமல் வெளியேறிய இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளும் பாகிஸ்தானுக்குப் பயிற்சிக்காக அனுப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சிறிலங்காப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுத்ததால், இந்திய மத்திய அரசு வெலிங்டனில் பயிற்சி பெற்று வந்த மேஜர் சன்ன ஹரிஸ்சந்திர, விங்கொமாண்டர் சாந்த திசநாயக்க ஆகியோரை செகந்தராபாத்தில் பயிற்சி அளிக்க இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்தது. 
ஆனால் அதனை நிராகரித்து விட்டு, இரு படை அதிகாரிகளையும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்புக்குத் திருப்பி அழைத்திருந்தார். 
இருவருக்கும் வேறெங்காவது இதே பயிற்சியைத் தொடர ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 
இந்தநிலையில், கொழும்பு வந்திருந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் இதுகுறித்து ஆராய்ந்ததாகத் தெரிகிறது. 
இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள குவேட்டாவில் கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு, இருபடை அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதுகுறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கான சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை. 
குவேட்டாவில் உள்ள கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியே, பாகிஸ்தான் இராணுவத்தின் மிகப்பழமையானதும் கௌரவமானதுமான பயிற்சிக் கல்லூரியாகும். 
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், குவேட்டாவில் இருந்த பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் கல்லூரி, இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது, தமிழ்நாட்டின் வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது. 
அதன் பின்னரே குவேட்டாவில் கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி செயற்படத் தொடங்கியது. 
பிரித்தானியாவின் பீல்ட் மார்சல் வவெல், பீல்ட் மார்சல் மொன்ட்கொமெரி, பீல்ட் மார்சல் ஓசின்லெக், பீல்ட் மார்சல் சிலிம், மற்றும் அவுஸ்ரேலியாவின் பீல்ட் மார்சல் பிளார்னே, பாகிஸ்தானின் பீல்ட் மார்சல் அயுப் கான், இந்தியாவின் பீல்ட் மார்சல் மானெக்சோ ஆகிய புகழ்பெற்ற இராணுவ அதிகாரிகள் குவேட்டாவில் தான் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.

அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள்.செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஒரே சம்பவத்தில் அதிகளவில் தீயணைப்புப் படைவீரர்கள் பலியாகியுள்ள சம்பவம் இதுவென்றே கருதப்படுகிறது.
கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரலிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.
அதிக வெப்பம் காரணமாக உள்ளூர்வாசிகள் எல்லோரும் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
இப்போது சுமார் 1000 ஏக்கர் அளவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 200 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
1933-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 25 தீயணைப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு தேர்தல் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேராது தனித்துப் போட்டியிடத் தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன்அலி தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசுடன் முரண்பட்டுக் கொண்டுள்ள பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹசன்அலி மாகாண சபை தேர்தல் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவோர் அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டில்லை. நிபந்தனைகளை ஏற்படுத்திக்கொள்ளவுமில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனித்துவமான கட்சி. எனவே, மாகாண சபைத் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என்றார்.
 இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டியில் மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாண முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து மாகாண சபை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார். தேர்தலை எதிர்கொள்ளுவது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார். தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு குழுக்களும் நியமிக்கப்பட்டன.