jeudi 28 février 2013

சந்திரிக்கா;ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்

வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்களால் நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
விஜய குமாரதுங்கவின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இந்தக்கூட்டம் இடம் பெற்றது.

விஜய குமாரணதுங்கவின்  சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்து விட்டு அங்கு அவர் உரையாற்றுகையில்,

நாட்டை ஆட்சி செய்யும் அனைவரும் இன்று நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்துவதற்கு முயற்சிப்பது இல்லை. வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்கள் மற்றும் மனிதர்களை மரத்தில் கட்டி வைத்து தண்டிப்பவர்களால் நாட்டில் நல்லாட்சியை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

எல்லோரும் நினைக்கினறார்கள் ஹொரகொல்லையில் எங்களுக்கு பாரிய சொத்துக்கள் உள்ளன என்று. எங்களுக்கு 4000 ஆம் எக்கர் காணிகள் அங்கு இருந்தன. 1956 ஆம் ஆண்டு எனது தந்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்து பாதுகாப்பதற்கு 500 ஏக்கர் காணியை விற்றார். 

பின்னர் எனது தாயும் எங்களை வளர்ப்பதற்கு காணிகளை விற்றார். எனது தாயாரே கொண்டுவந்த சட்ட மூலம் ஒன்றின் பிரகாரம் எங்களுக்கு சொந்தமான 3000 ஆம் ஏக்கர் காணியை அரசுக்கு வழங்கினார். எனக்கு மிகுதியானது 200 ஏக்கர் மட்டுமே. 

நான்  ஜனாதிபதி பதவியை துறந்ததன்  பிறகு ஐந்து முறை காணியை விற்றுள்ளேன். எனக்கு வேரு எந்த ஒரு வருமானமும் இல்லை என்பதனை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது எனது இரு பிள்ளைகளுக்கும் ஒரேயொரு வாகனம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் பயணம் சென்றால் அவர் வரும் வரை மற்றவர் காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இருவரும் சேர்ந்து போக வேண்டும். ஆனால் இன்று ஒருவரும் 11 வாகனங்கள்;, மற்றவருக்கு 12 வாகனங்கள் இன்னுமொருவருக்கு 15 வாகனங்கள் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களில் படித்தவர்கள் கைவிரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட இல்லை. மிகவும் குறைந்த படிப்பின் மூலமும் குறைந்த முயற்சியின் மூலமும் ஆகக்கூடிய பணத்தை சேர்த்துக் கொள்ளக் கூடிய துறையாக இன்று நாடாளுமன்ற அங்கத்தும் காணப்படுகிறது. 

விஜய சிறைக்கு செல்லும் போது எனது மகனுக்கு மூன்று மாதங்கள். அப்போது பால் மா வாங்க கூட ஐந்து சதம் இருக்க வில்லை.  

அந்தநேரம் மேர்வின் சில்வாவின் குடும்பமும் எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தன. மேர்வின் சில்வாவும் சிறையில் இருந்தார். இவர்கள் அனைவருக்கும் உணவளிப்பதற்காக ஐந்து சதம் கூட யாரிடமும் கேட்க வில்லை. எங்கள் காணியில் இருந்த மரங்களை விற்று அவர்களை நான் காப்பாற்றினேன்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது எனக்கு சொந்தம் இல்லாத ஐந்து சதத்தைக்கூட நான் எடுத்தது இல்லை. அதே போன்று எனது அரசாங்க அங்கத்தவர்களையும் இயன்ற அளவு அதிலிருந்து தடுத்தேன். ஆனால் இன்றைய நிலைமை மாறி விட்டது. 
நாட்டின் ஆட்சியை பற்றி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பெருமளவு கற்பழிப்பு செய்பவர்கள் அரச தரப்பு கிராமிய மட்ட உறுப்பினர்களாக இருக்கின்றனர்

இவைகளை தடுப்பதற்கு கூட அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். - 

சிங்களவராக பிறந்தத்திற்காக வெட்கப்படுகிறேன்..இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடுமையாக இருக்கவேண்டும்: நிமல்கா பெர்னாண்டோ.


இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடுமையாக இருக்கவேண்டும்: நிமல்கா பெர்னாண்டோ
இலங்கையில் நடந்த மனித உரிமைமீறலுக்கும் யுத்தக்குற்றத்திற்கும் எந்த தீர்மானத்தை கொண்டு வந்தாலும் போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயகத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்டவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்களவராக பிறந்தத்திற்காக வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்த நிமல்கா பெர்னாண்டோஇலங்கை அரசுமீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெரிவித்த நீண்ட செவ்வியின் முக்கிய கருத்துக்களை தொக்குத்து  தருகிறார் குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர். 
யுத்தக்குற்றத்திற்கு தண்டனை வேண்டும்
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலிலும் யுத்தக்குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளது. இதனை நிருபிக்கும் வகையில் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டமை தொடர்பான படங்கள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்துள்ள நிமல்கா பெர்னாண்டோ யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழிர்களை மனிதாபிமான நடவடிக்கையில் கொன்றதாக அரசு தட்டிக்கழிக்கிறது என்றார். 
இதை எல்லாம் சிங்கள ஊடகங்கள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு கீழ் கட்டுப்பட்டு வெளியிடமுடியாமல் இருக்கின்றன. இங்குதான் சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள் என்பதை உணர்த்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார் நிமல்கா பெர்னாண்டோ. 
உயிருடன் ஒரு சிறுவனை பிடித்துக்கொன்றமைக்கு சாட்சியங்கள் உண்டு. சனல் 4 வீடியோ அனைத்துமே மனித உரிமைகள் மீறல்களுக்கு சாட்சிகளாக அமையும். இந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர். 
அமெரிக்கா, சீன - இலங்கை உறவு பிடிக்காமை தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வரலாம். அதேபோல எல்லா நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் தேவைக்காகத்தான் எதிர்ப்பும் ஆதரவும் காட்டுகின்றன. எப்படியான போதிலும் மனித உரிமைமீறல்கள் யுத்தக்குற்றங்கள் என்பவற்றுக்காக எந்தவொரு நாடும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்று மேலும் குறிப்பிட்டார் நிமல்கா பெர்னாண்டோ. 
அரசியல் தீர்வு அவசியம்
சர்வதேசம் இலங்கைக்கு எதிராக செயற்படுவதால் தனது முக்கியத்துவத்தை உயர்த்த முடியும் என்று தெரிவித்த நிமல்கா பெர்னாண்டோ உலக நாடுகளில் தமிழ் மக்கள் சட்ட விரோதமாக குடியேறுவது முதல் எல்லாப் பிரச்சினைக்கும் ஒரே தீர்வாக அமைவது இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை அமுல் படுத்துவதே ஆகும் என்று குறிப்பிட்டார். 
குற்றங்களில் பொன்சேகாவுக்கும் பங்குண்டு 
ஐ.நாவின் விசாரணைகளுக்கு எதிராகவே பொன்சோ செயற்படுவார் என்று தெரிவித்த நிமல்கா பெர்னாண்டோ யுத்ததில் பொன்சேகாவுக்கும் முக்கிய பங்குண்டு என்று சுட்டிக்காட்டினார்.  
இந்த விடயத்தில் அரசை எதிர்த்தால் இவரும் சிக்கிக்கொள்வார் என்ற நிலையில் இருந்துதான் பேசுகின்றார். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி என்ற வகையில் பொன்சேகாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று மேலும் தெரிவித்தார். 
விசாரணை தேவை
தமிழர்களை ஏமாற்ற முடியாது. இவர்கள் இன்று சர்வதேசத்தின் உதவியுடன் ஜெனிவாவில் உறுதியாகப் போராடுகிறார்கள் என்று குறிப்பிட்ட  நிமல்கா பெர்னாண்டோ தற்போது கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்றக்கொள்ளவில்லை என்றார். 
சர்வதேசம் இலங்கைக்கு ஒரு சந்தர்பபத்தை வழங்கியுள்ளது. எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஒரு பக்கம் சார்பானது. அதையே நடைமுறைபடுத்த மாட்டோம் என்கிறது அரசு. அதனால் மேலும் கடுமையான ஒரு தீர்மானத்தை ஐ.நா கொண்டு வரவேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் மனித உரிமை பேரவைக்கு கையெழுத்திட்ட நாடு என்ற வகையில் இலங்கை பதிலளிக்க வேண்டியது அதன் கடமை என்று கூறிய நிமல்கா பெர்னாண்டோ அரச சார்பற்ற நிறுவனம் என்ற வகையில் சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை அமைத்து அதனுடாக இலங்கை விசாரிக்கப்பட வேண்டும் என்றார் அழுத்தமாக. 
தொகுப்பு குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்.        நன்றீ

அடிவாங்கிய கறுப்பு எம்.ஜி.ஆர் (காணொளியில் பார்க்க.....)


 (காணொளியில் பார்க்க.....)இந்தியாவின், தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தை அவருடைய கட்சி எம்.எல்.ஏ ஒருவர் அடித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் சென்றுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் வெளியே வந்தார். இதன்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், தீடீரென்று சில தொண்டர்களை அடிக்கவும் செய்தார். பிறகு அவர் விஜயகாந்தையும் ஓங்கி அடித்துள்ளார். இதனால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சியடைந்தார். கட்சி எம்.எல்.ஏ.வே விஜயகாந்த்தை அடித்த காட்சியைப் பார்த்த தொண்டர்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உரைந்துப்போனார்கள். ஆனால் அடித்தவோ தனக்கு எதுவும் தெரியாத வகையில் நடந்துகொண்டார். ஆனால் இக்காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் பொது இடத்தில் தனது கட்சி உறுப்பினரொருவரை அடித்தவர். இந்நிலையில் அவரே பொது இடத்தில் அடிவாங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடித்தவருக்கு என்ன நிலை ஏற்படப்போகுதோ என தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பணம், தங்கம், கப்பல்கள் எங்கே” : போஸ்டர் ஒட்டிய மூவர் கைது!

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் மோதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘ஊழலுக்கு எதிரான குரல்” என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் எசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கை பிரச்சினையை சர்வதேசமயமாக்க வேண்டாம்: ஜெனீவாவில் மஹிந்த சமரசிங்க!


இலங்கையின் தேசிய பிரச்சினைகளை சர்வதேசமயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் எதிராக உள்ளது என மனித உரிமைகள் பேரவைக்கு,ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரும் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது பொது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, இன்று மாலை உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தனது உரையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,இலங்கையின் உள்ளநாட்டு பிரச்சினைகளை சர்தேசமயப்படுத்துவதனால் நாட்டின் ஐக்கிய நிலை பாதிப்படையும். இதேவேளை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் தேவையற்ற ஒன்றாகும். மேலும் இவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.
போருக்கு பின்னர் இலங்கையில் சிறப்பான முறையில் மனித உரிமை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளில் எஞ்சியிருக்கும் பயங்கரவாத சக்திகள் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரசாரங்களையும் தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இது வருந்ததக்க விடயமாகும். இதனால் இலங்கை பக்கசார்பான, சமநிலையற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என கூறுவது தவறான விடயமாகும். மேலும் செனல் 4 ஆவணப்படம் குறித்து புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற. 75வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது 99சதவீதமான நிலப்பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 98சதுர கிலோ மீட்டர் பகுதியே இன்னமும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இந் நிலப்பரப்பும் மிகவிரைவில் சுத்தம் செய்யப்படும்.
இதேவேளை காணிகள் குறித்த பிரச்சினைகளின் தீர்வுக்காக காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் குறைக்கப்பட்டு வருவதோடு இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு வருகின்றது.மக்கள் சுதந்திரமாக நடமாட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

புர்கா ஆடை ஒரு பயங்கரவாத ஆடையே - சூட்சுமமாய்ச் சொல்கிறார் முஸம்மில்

இஸ்லாமியப் பெண்களால் முழு உடம்பும் மூடும்படியாக அணிகின்ற புர்கா ஆடை, மத பயங்கரவாதத்தைக் காட்டக்கூடியதான்றாகும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இவ்வாறான ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்லை எனக் குறிப்பிடுகின்ற முஸம்மில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரோ பங்களாதேஷின் பிரதம மந்திரியோ, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரோ இந்த சாக்குப்பை ஆடையைப் பயன்படுத்துவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டில் சில அடிப்படைவாதிகளே இதனை நடைமுறைப் படுத்திவருகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஹலால் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்துள்ள மாநகர சபை உறுப்பினர், புனித அல்குர்ஆன் எந்தவொரு இடத்திலும் அநியாயமாகப் பொருளீட்டச் சொல்லவில்லை. ஹலால் என்பது அன்றுதொட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முஸ்லிம்களின் வாழ்வியல் முறையொன்றாகும். அவ்வாறன்றி எந்தவொரு இயக்கத்தினதும் சொந்தக் கருத்தல்ல என்பதையும் அறிவுறுத்தினார்.

mercredi 27 février 2013

பிரபாகரனின் மகன் என்பதற்காக அந்தச்சிறுவன் கொலை செய்யப்பட்டிருந்தால்.

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நீடித்துச் சென்ற ஆயுத வன்முறையின் அகோரம் இனம் மதம் மொழி பேதங்களுக்கு அப்பால் லட்சத்திற்கு மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களை பலி கொண்டிருக்கின்றது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. 

இந்நிலையில் இத்தனை உயிர்ப்பலிகளுக்கும் பிரதான காரணகர்த்தாக்களில் ஒருவரான பிரபாகரனின் மகன் பலாச்சந்திரன் உயிருடன் உள்ளதும், உயிரிழந்த பின்னரும் என இரு படங்கள் வெளியாகியிருக்கின்றது. இப்படத்தினை வெளியிட்டுள்ளவர்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு சுட்டுகொலை செய்யப்பட்டிருக்கின்றார் என தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பலரையும் பலவிதமான விவாதங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது.

பிரபாகரனின் மகன் என்பதற்காக அந்தச்சிறுவன் கொலை செய்யப்பட்டிருந்தால்..

கொலைஞர்களுக்கு சொல்லக்கூடியது யாதெனில் ..

பிரபாகரன் பாலச்சந்திரனின் வயதை ஒத்த எத்தனை ஆயிரம் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை கட்டிவிட்டு அவர்களை பலி கொடுத்தார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

தனது வயதை ஒத்த எத்தனை நூறு பாலகர்களின் உடம்பில் வெடிகுண்டுகளை கட்டி தனது தந்தை கொலைக்களம் அனுப்பியிருப்பார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

தனது தந்தை தன் வயதை ஒத்த எத்தனை சிறார்களை படுத்த பாயில் எல்லக்கிராமங்களில் கொலை செய்திருப்பார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

பிரபாகரன் தனது பொய்பிரச்சராங்களுக்கா பாலச்சந்திரனின் வயதை ஒத்த பாலகர்களை கொடுரமாக கொலை செய்து அவற்றை காட்சிப்படுத்திய சம்பவங்களை அன்று புலிகளின் ஊடக பிரிவு பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர் பின்னாட்களில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இவ்வாறான தொலைகள் எல்லை கிராமங்களில் மாத்திரமல்ல தமிழர் குடிமனைகளுக்குள்ளேயே இடம்பெற்றதாகவும் விடயங்களை புலிகளே செய்துவிட்டு சிறிலங்கா இராணுவம் செய்ததாக பிரச்சாரம் செய்ததாகவும் தயா மாஸ்ரர் கூறியிருக்கின்றார். இவ்வாறான கொடுமைகளை பாலச்சந்திரன் எவ்வாறு அறிந்திருக்க முடியயும்?

பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட எத்தனையோ பேருக்கு பிறந்த குழுந்தைகள் இன்று பெற்றோரை இழந்தவர்களாக பரிதவிக்கின்றனர் என்பதை பாலச்சந்திரன் உணர்ந்திருக்க அவரது வயதுக்கு முதிர்ச்சி கிடையாது.

பிரபாகரனால் அங்கவீனர்களாக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் பெற்றோர் படுகின்றவேதனைகளை கண்முன்னே கண்டுபடும் அவஸ்தைகளையும் இத்தனைக்கும் தனது தந்தையே காரணம் என்பதையும் பாலச்சந்திரனால் உணர்ந்து கொள்ளவும் அவருக்கு வயது போதாது.

பாலச்சந்திரன் சொகுசாக வாழ்வதற்கு கட்டப்பட்ட மாளிகையையும் அவருக்காக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தையும் அமைப்பதற்காக எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது என்பதையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

பிரபாகரனின் போலிவேசத்தை உணராமல் ஆயுதப்போராட்டத்தில் இறங்கி நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்டவர்களை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வாகனமொன்றில் ஏற்றி குண்டுவைத்து தகர்த்த கொடுமையையும் நேரில் கண்ட மக்கள் இன்றும் வன்னியில் வாழ்கின்றனர். அனால் பாலச்சந்திரனுக்கு இது தெரியாது.

தனது வயதை ஒத்த பாலகர்களை முகாம்களில் அடைத்து வெளியுலகே காட்டாது கொலைவெறி ஏற்றி ஒர் மாற்று இனம் ஒன்றினை சேர்ந்த மனித உயிர்களை வயது வேறுபாடு பால் வேறுபாடு இன்றி படுகொலை செய்தவற்கு ஏவிய படுபாதக செயல்களையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க வாய்பே இல்லை.

வயிற்றில் குழந்தையை அல்லது குழந்தைகளை தாங்கிய பெண்களை அவர்களின் வயிற்றில் குண்டை கட்டி தற்கொலைதாரிகளாக அனுப்பி தாயையும் சேயையும் படுகொலை செய்த கொடுமைகளையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

தனது கொள்கையை ஏற்க மறுத்தார்கள் என்ற காரணத்திற்காக மனிதர்களை பிடித்து மரத்தை , கொங்கிறீட்டை துழைக்கும்; றில்லர்களால் கால்களில் ஓட்டை போட்டு சங்கிலியில் பிணைத்து இருட்டு அறைகளில் வருடக்கணக்கில் அடைத்து வைத்திருந்த கொடுமைகளையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

இவ்வாறு பாலச்சந்திரனின் தந்தை மனித குலத்திற்கு செய்த கொடுமைகளை அடுக்கினால் பக்கங்கள் போதாமல் செல்லும். ஆனால் பிரபாகரன் தனது பிள்ளைக்கு ராஜபோக வாழ்க்கை அமைத்து கொடுத்து மாற்றான் பிள்ளைகளை பலி கொடுத்தார். இந்த விடயத்தை புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னனும் முன்னாள் பயங்கரவாதியுமான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் டிபிஎஸ் ஜெயராஜூக்கு வழங்கிய பேட்டியில் உறுதி செய்திருந்தார். அப்பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறையும் ஆயுதக்கப்பல்களை அனுப்புகின்றபோது தலைவரின் மகன் பாலச்சந்திரனுக்கு ஒரு விளையாட்டு பொருளேனும் அனுப்புவேன்' எனத் தெரிவித்திருந்தார். நல்ல விடயம் மாற்றன் பிள்ளைக்கு துப்பாக்கியும் வெடி மருந்தும் தலைவரின் பிள்ளைக்கு வெளிநாட்டு விளையாட்டு பொருள். இதற்கு பெயர்தான் ' புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' எனச் சொல்லப்பட்டது.

பாலச்சந்திரனுக்கு விளையாட்டு பொருட்களை வாங்க பணம் கொடுத்தது யார்? புலம்பெயர் புலிப்பினாமிகள். அவர்கள் என்ன பாலச்சந்திரனின் மீது கொண்ட பாசத்திலா அதை செய்தார்கள்? அல்ல தங்களது வியாபாரம் ஒட, தங்களது பிழைப்பு நிலைக்க அதை செய்தார்கள். அன்று பிரபாகரனை பங்கரில் இருளில் வைத்துக்கொண்டு அவருக்கு சுகபோக வாழ்வை கொடுத்து தங்களது பிழைப்பை நடாத்தினார்கள். ஆனால் இன்று யாவற்றுக்கும் இயற்கை பதிலளித்துள்ளது.

பிரபாகரனையே தங்களது பிழைப்புக்கான விளம்பரமாக பயன்படுத்தி பழகியவர்கள் இன்று பிரபாகரன் இல்லாத கட்டத்தில் விளம்பரமாக பிரபாகரனின் மகனின் இப்படத்தினை தூக்கியுள்ளனர். அதற்கு காரணம் பாலச்சந்திரன் மீதுள்ள பாசம் ஒன்றும் கிடையாது. தமிழரை ஏமாற்றுவதானால் இதுவே ஒரு சாதனம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இன்று மக்கள் தெளிவாக உள்ளனர். பாலச்சந்திரன் போன்று எத்தனையோ பாலகர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இது புலி எச்சசொச்சங்களின் கைலாகத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட படம் தொடர்பில் கருத்து தெருவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறான படங்கள் தமக்கு புதியவை அல்ல எனவும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட எத்தனையோ படங்களை தாம் கண்டே வந்துள்ளோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்த பின்னர் சந்பந்தப்பட்ட தரப்பினர் அதன் உண்மைத் தன்னையை நிருபிக்கட்டும் என விட்டு விடுவோம்.

ஆனால் இது வெளியிடப்பட்டதன் பின்னணி பற்றிய சில உண்மைகளை மக்கள் அறிந்து விடவேண்டும். அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை கொண்டு வருகின்றது. இப்பிரேரணை தமிழ் மக்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றது என்ற கேள்விக்கு பதிலே கிடையாது. இலங்கையுடன் சீனா ஓர் சிறந்த ராஜதந்திர உறவை பேணுகின்றது. இந்த உறவை கண்டு அமெரிக்கா மிரண்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு போர்குற்றம் என்ற மிரட்டல் ஒன்றை கையிலெடுத்து இலங்கையை தனது காலடியில் விழவைக்க முடியும் என கருதுகின்றது.

இவ்விடயத்தில் இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்து கொண்டிருக்கின்றது. ஆசியாவில் இந்தியா அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்பது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. பாலசந்திரனின் படம் வெளியானபோது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியதுடன் தனது சந்தேகங்களை வெளிப்படையாக முன்வைத்தார். ஆனால் இந்திய பிரதமர் இதே படங்களை ஆதாரமாக கொண்டு முன்வைக்கப்படுகின்ற போர்க்குற்றத்திற்கு ஆதரவளிப்போம் என்கின்றார். இந்த இரட்டை வேடம் ஒன்றேபோது, போர்க்குற்றம் எனக் கோஷமிடுகின்றவர்களின் போலி வேஷங்களை உணர்ந்து கொள்ள.

மேலும் அமெரிக்கா கொண்டு வருகின்ற பிரேரணையில் இலங்கை அரசு தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை விரைவில் ஏற்படுத்தவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றது. அமெரிக்காவின் இந்த அழுத்தமும் அமெரிக்காவின் பிரேரணைக்கு பக்கவாத்தியாமாக வெளியாகியிருக்கின்ற படங்களும் இன்னும் வெளியிடப்போகின்றோம் என விடுக்கப்படுகின்ற மிரட்டல்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. இலங்கையிலே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என விரும்புகின்ற சக்திகள் மக்கள் மனதில் வேதனையை தரக்கூடிய இச்செயற்பாடுகளை மீண்டும் ஞாபகமூட்டுவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கின்றார்களா?

எது எவ்வாறாயினும் குறித்த சிறுவன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.ஆனால் இக்குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்தற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும். இக்கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது இந்தபடங்களை குறித்த ஊடகத்திற்கு வழங்கியவர்கட்கே தெரியும். இப்படங்கள் உண்மையானவையாயின் இப்படங்களை குறித்த ஊடகங்களுக்கு வழங்கியவர்களிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.

எனவே இப்படங்களை வெளியிட்ட ஊடகங்கள் இப்படங்கள் பொய்யானவை அல்லவென்றால் தமக்கு யாரிடமிருந்து இப்படங்கள் வந்ததென்பதையும் வெளியிடுவதுடன் அவர்களை இலங்கை அரசு இனம்காண்பதற்கு உதவவேண்டும். இவ்விடயம் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கையின் குற்றவியல் சட்டதிட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என நிருபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமாயின் இப்படங்களை வெளியிட்டவர்கள் இப்படங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு படத்தினை வழங்கிய சக்திகளை இனம்காட்டவேண்டும்;. அவ்வாறு இனம்காட்டாதவிடத்து படங்கள் பொய் என்பது மாத்திரமல்ல படத்தினை வழங்கியோர் தமது சுயலாபங்களுக்காக இவ்வாறான திட்டமிட்ட செயல்களில் இறங்கியுள்ளனர் என்ற என்ற இலங்கை அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அதிர்ச்சிகர அறிக்கை


இலங்கை: தமிழ் கைதிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாதல்
சிறையில், அரசியல் நோக்குடனான பாலியல் துன்புறுத்தல்கள் போர்க் காலம் முதல் தொடர்கின்றன.
SJ (a pseudonym) is a survivor of sexual abuse by Sri Lankan security forces while in detention.
“இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, தற்பொழுதும் அந்த அட்டூழியச் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவதோடு, எல்ரீரீஈ தரப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் ஆணையும் பெண்ணையும் இது கடும் ஆபத்தில் தள்ளிவிடுவதாக அமைகின்றது”.
Brad Adams, Asia director

[இலண்டன் (London)] – தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும் ஏனைய பாலியல் வன்முறைகளையும் பிரயோகித்து வந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch)இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் போது சிறையில் பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள்  நிகழ்ந்து வந்தன எனவும், அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினாலும் போலீஸ் படையினாலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கண்டறிந்தது.
YS (a pseudonym) is a survivor of sexual abuse by Sri Lankan security forces while in detention.
“‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்’: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியியல் வன்முறை’” என்ற 144 பக்க அறிக்கையானது இலங்கை முழுவதிலுமுள்ள உத்தியோகபூர்வமான மற்றும் இரகசியமான தடுப்பு முகாம்களில் 2006-2012 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான 75 பேர்களின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விரிவான விபரங்களை தருகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஆவணப்படுத்திய விடயங்களில், பல நாட்களாக அடிக்கடி பல நபர்களினாலும், இராணுவத்தினாலும், போலீஸ் படையினாலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழ் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டிருப்பதாகப் பதிவாகியிருக்கின்றது.

“இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்” என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ப்ராட் அடம்ஸ் (Brad Adams) கூறினார். “இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, தற்பொழுதும் அந்த அட்டூழியச் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவதோடு, எல்ரீரீஈ தரப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் ஆணையும் பெண்ணையும் இது கடும் ஆபத்தில் தள்ளிவிடுவதாக அமைகின்றது”.



பாலியல் வல்லுறவுக்கு ஆளான அனேகமானோர் இலங்கைக்கு வெளியால் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு, தமக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை மருத்துவ மற்றும் சட்டமுறை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் பாலியியல் வன்முறைக்கு அப்பால் துன்புறுத்தப்பட்டும்  கொடுமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு இலங்கையில் வெளிப்படையான ஒரு ஆய்வை நடாத்தவோ அல்லது இன்னும் சிறையிலிருக்கின்ற மக்களை நேர்காணவோ முடியாமல் போனதால், இத்தகைய சம்பவங்கள் அநேகமாக அரசியல் நிகழ்வுகளாக, சிறை நிகழும் பாலியல் வல்லுறவுகளின்  மிகச்சிறிய ஒரு பகுதியை மாத்திரமே பிரதிபலிப்பதாக அமைகின்றன.

ஒரு தனியாள்  இனம் தெரியாத நபர்களினால் வீட்டிலிருந்து  கடத்தப்பட்டு, ஒரு தடுப்பு முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, எல்ரீரீஈ செயற்பாடுகள் பற்றி தகாத முறையில் விசாரிக்கப்படுதல் என்கின்ற விதத்திலேயே அதிகமான சம்பவங்கள் தொடர்ந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. வெளிநாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த 23 வயதுடைய ஒரு நபர், தான் எந்த விதமான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாத நிலையில் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தில் தான் கையொப்பமிடும் வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். 32 வயதுடைய ஒரு பெண், சிவில் உடையில் வந்த இரண்டு ஆண்களினால் தான் கைதுசெய்யப்பட்டு, தனது ஆடைகள் களையப்பட்ட நிலையில் நிர்வானமாக தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறினார். “அனைத்தையும் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு அந்த நபர்கள் என்னிடம் கூறினார்கள்” என அந்தப் பெண் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் முறையிட்டார். “அவர்கள் என்னைக் கொலைசெய்து விடுவார்கள் என்று நினைத்ததால் நான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மறுத்தேன். நான் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டேன். இரண்டாவது நாள் ஒரு நபர் எனது அறைக்கு வந்து என்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். ஆகக்குறைந்தது மூன்று நாட்களாக நான் பலராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். எத்தனை தடவைகள் என்பது எனக்கு நினைவில்லை”.
JS (a pseudonym) was a victim of torture and sexual abuse by Sri Lankan security forces after being deported
பாலியியல் துஷ்பிரயோகமானது, சந்தேகிக்கப்பட்ட எல்ரீரீஈ உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் பரந்தளவில் பயன்படும் முக்கிய ஒரு அங்கமாக விளங்கியுள்ளது என்பது எதைச் சுட்டிக்காட்டுகின்றது எனில், ஆயுதப் போராட்டத்தின் போதும் அதே நேரம் எப்பொழுதும் ஆயுதப் படைகளினால் கைதுசெய்யப்படும் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கும்  ஏனைய பாலியியல் வன்முறைக்கும் பலியாகுகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. எல்ரீரீஈ செயற்பாடுகளில் ஈடுபாடு,மற்றும்  துணைவர்களும் உறவினர்களும் அடங்கலாக ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் பற்றியும்  ‘ஒப்புதல் வாக்குமூலங்களை’ பெறுவதற்கும் அதே நேரம் எல்ரீரீஈ தரப்புடன் தொடர்புவைப்பதை அதைரியப்படுத்தும் வகையில் பரந்தளவில் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தைத் திணிப்பதற்கும் என்றே இந்தச் சித்திரவதைகள்  நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகின்றது.

தாம் அடிக்கப்பட்டதாகவும்,தனது கைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும், பகுதியளவில் மூச்சுத்திணற வைக்கப்பட்டதாகவும், எரியும் சிகரெட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் விவரித்தனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் கதைத்தவர்களில் எவருமே தடுத்துவைக்கப்பட்ட நேரத்தில் சட்ட ஆலோசனையையோ, குடும்ப அங்கத்தவர்களையோ அல்லது மருத்துவர்களையோ நாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. துஷ்பிரயோகம் முற்றுப்பெறும் என எண்ணி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டாலும் பாலியல் வல்லுறவு அடங்கலாக சித்திரவதைகள் அடிக்கடி தொடர்ந்ததாகவே அநேகமானோர் கூறினர். நேர்காணப்பட்ட தனி நபர்கள் எவரும் முறையாக விடுவிக்கப்படவில்லை, ஆனால் மாறாக உறவினர் ஒருவர் உயர் அதிகாரிகளுக்கு இலஞ்சத்தை வழங்கிய பின்னர் ‘தப்பியோடுவதற்கு’ அனுமதிக்கப்பட்டனர்.

“இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்னால் மடக்கிப்பிடித்து [அதே வேளையில்] ஒரு மூன்றாவது அதிகாரி எனது ஆண்குறியைப் பிடித்து அதனுள் ஒரு உலோகக் கம்பியைத் திணித்தார்” என 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்கப் படைகளிடம் சரணடைந்த ஒருவர் கூறினார். “அவர்கள் எனது ஆண்குறியினுள் சிறிய உலோகக் குண்டுமணிகளைத் திணித்தனர். நாட்டை விட்டுத் தப்பி வந்த பின்னர் இந்தக் குண்டுமணிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது”. ஒரு மருத்துவ அறிக்கை இவரின் வாக்குமூலத்தை உறுதிசெய்கின்றது. 
JS (a pseudonym) was a victim of torture and sexual abuse by Sri Lankan security forces after being deported
அவர்கள் செய்த குற்றத்தை தாம் வெளிப்படுத்தினால் பொதுவாக குற்றம் புரிந்தவர்களிடமிருந்து பதிலடி கிடைக்கும் என்றும் சமூகத்தில் இகழப்படுவோம் என்னும் பய உணர்வுமே தம்மீது  நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகம் பற்றி தங்களை அமைதியாகவிருக்கச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கதைத்த பலவந்த பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் கூறினார்கள். பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி பயனுள்ள விதத்தில் அறிக்கையிடுவதையும் விசாரணை செய்வதையும் தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட நிறுவனசார் தடைகளும் பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றி அறிக்கையிடும் தயக்கத்திற்கு மூலகாரணமாக அமைந்தன.

“பாலியல் வல்லுறவு பலியானவர்களுக்கான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளையும் அரசாங்கம் முடக்கியது” என அடம்ஸ் கூறினார். “வடக்கில் அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகித் தப்பிப்பிழைத்தவர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்ற சேவைகளையும் இராணுவம் சூட்சுமமான முறையில் தடைசெய்துள்ளது”.

போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் அல்லது போர் முடிவுக்குப் பின்னர் சிறையில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள்  தொடர்பில் ஆயுதப் படைகளில் எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதுடன் குற்றம் செய்தவர்கள் குற்றத்திற்கு தண்டனையின்றி சுதந்திரமாகவிருக்கின்றனர் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

தாங்கள் அரச பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என்பதை மறைப்பதற்கு இராணுவமும் போலீஸும் மிகக் குறைந்தளவு முயற்சியையே மேற்கொண்டனர் என நேர்காணப்பட்டவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்கள். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (C.I.D.)பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (T.I.D.) போன்ற விசேட பிரிவுகள் உள்ளிட்ட இராணுவத்தினர், இராணுவத் துப்பறியும் பிரிவினர் மற்றும் போலீஸ் முதலிய தரப்புகள் இவர்களில் அடங்குகின்றனர். இந்த அரச திணைக்களங்களின் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்தும் தகாத முறையில் விசாரணைகளை நடாத்தினர் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அறிக்கையிட்டனர். இவர்கள் துஷ்பிரயோகம் நிகழ்ந்த குறித்த முகாம்களையும் தடுப்பு ஸ்தலங்களையும் அடையாளம் காட்டினார்கள்.

பாலியல் வன்முறையைப் பிரயோகித்தல் என்பது ஒரு சாதாரண கீழ்மட்டத்து நிகழ்வாகவோ அல்லது அயோக்கியத்தனமான பாதுகாப்புப் படையினர் சிலரின் செயல்களாகவோ காணப்படவில்லை, ஆனால் மாறாக உயர் மட்ட அதிகாரிகளினால் அறிந்த அல்லது அறிந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டியதான  பரந்தளவில் நிகழ்ந்த வழக்கமான ஒரு செயலாக காணப்பட்டுள்ளதையே இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் இலங்கையின் வட பிராந்திய யுத்தகளப் பகுதிகளில் மாத்திரமன்றி தலைநகரமான கொழும்பிலுள்ள இராணுவ முகாம்களிலும், போலீஸ் நிலையங்களிலும் அதே நேரம் யுத்த பிரதேசங்களுக்கு தூரத்திலுள்ள தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் ஏனைய இடங்களிலும் நிகழ்ந்தன. கொழும்பிலுள்ள C.I.D  தலைமை அலுவலகத்தின் கெடுதிக்குப் பெயர்போன நான்காவது மாடியும் T.I.Dஆறாவது மாடியும் இவற்றில் அடங்கியிருந்தன.

ஆயுத மோதல்களின் ஒரு பாகமாகப் புரியப்பட்ட பாலியல் வல்லுறவு செயல்கள் மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் என்பன போர் குற்றங்களாகும். அத்தகைய வன்முறைகளைத் தடுப்பது மாத்திரமன்றி, துஷ்பிரயோகம் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்களை விசாரித்து அந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு கடப்பாடாகும். அத்தகைய துஷ்பிரயோகங்களை அறிந்திருந்த அல்லது அறிந்திருக்க வேண்டிய  அதிகாரிகள்கூட நடவடிக்கையை எடுக்கத் தவறியிருந்தனர். இதனால், கட்டளையிடும் பொறுப்பு விடயம் என்ற ரீதியில் அவர்களும் குற்றம் புரிந்தவர்கள் ஆகுகின்றார்கள்.

யுத்தகாலத் துஷ்பிரயோகங்களுக்கான நியாயத்தையும் பொறுப்புக்கூறும் தன்மையையும் முன்வைப்பதற்கான 2012 மார்ச் மாதத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட தனது பொறுப்புக்களை இலங்கை அரசாங்கம் போதியளவில் பின்பற்றி நிறைவேற்றியதா என்பது பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை பெப்ரவரி மாதத்தில் விசாரணை செய்யும். ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை இந்த சபை பணிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

“பாதுகாப்புப் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் ‘பொய்’ அல்லது ‘எல்ரீரீஈ சார்பான பிரச்சாரம்’ என எண்ணி அரசாங்கம் தனது படையினரை விடுவித்துள்ளமையே அரசாங்கத்தின் பதிலாகவிருக்கின்றது” என அடம்ஸ் கூறினார். “இந்தக் கொடூரமான குற்றங்களைப் பற்றி அரசாங்கத் தரப்பில் எவர்கள் அறிந்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கின்றமையானது ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்பதற்கு மேலும் சான்றாக அமைகின்றது”.

“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்”: இல் இருந்து பெறப்பட்டவை

தலைப்பெழுத்துக்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகவும் நபரின் உண்மையான பெயருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாததாகவும் இடப்பட்டுள்ளன.

ஜே எச் (JH) என்பவரின் சம்பவம்

ஜே எச் (JH) என்பவர் 23 வயதுடைய ஒரு தமிழர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நேரம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக கொழும்புக்குத் திரும்பினார். ஒரு மாதம் கழிந்த பின்னர், வேலை விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு வெள்ளை வேனில் வந்த பலர் அதிலிருந்து குதித்தார்கள். ஒரு விசாரணைக்கு தான் தேவைப்படுவதாகக் கூறி, அவர்கள் தனது கண்களைக் கட்டி, ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் பயணித்து, தெரியாத ஒரு இடத்திற்கு தன்னை எடுத்துச்சென்றதாக அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட [போது] நான் அங்கு ஏனைய நான்கு நபர்கள் இருந்த ஒரு அறையைக் கண்டேன். நான் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கும் தொடர்புகள் பற்றியும் அண்மையில் வெளிநாட்டிற்குசென்ற காரணம் பற்றியும் விசாரிக்கப்பட்டேன். அவர்கள் எனது ஆடைகளை உரிந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் மின்சாரக் கம்பிகளினால் அடிக்கப்பட்டு, எரியும் சிகரட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டு, பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு பொலித்தின் உறையைக் கொண்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டேன். பின்னர் அந்த இரவு, நான் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டேன். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். முதலாவது இரவு, ஒருவர் தனியாக வந்து என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் இரவுகளில், இரண்டு பேர் எனது அறைக்கு வந்தார்கள். அவர்கள் என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்திவிட்டு அவர்களுடன் வாய்வழிப் பாலியல் உறவுக்கும் என்னை வற்புறுத்தினார்கள். இந்தப் பாலியல் வல்லுறவுகளின் பின்னர் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கு தொடர்புகளிருப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலத்தில் நான் கையொப்பமிட்டேன்.

ரீ ஜே (TJ ) என்பவரின் சம்பவம்

ரீ ஜே (TJ ) என்பவர் 19 வயதுடைய ஒருவர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் தனது கற்கைகளைப் பூர்த்திசெய்து விட்டு இலங்கைக்குத் திரும்பியவர். 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை நேரத்தில், ரீ ஜே (TJ ) வவுனியாவில் (Vavuniya) ஒரு நண்பரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிய நேரத்தில் அவருக்கு அருகில் ஒரு வெள்ளை வேனை நிறுத்தி சிவில் உடைகளை அணிந்திருந்த ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு நபர்கள் அதிலிருந்து குதித்தார்கள். அவர்கள் ரீ ஜே (TJ ) ஐ பலவந்தமாக இழுத்து வேனினுள் தள்ளி, அவரின் கண்களைக் கட்டி, தெரியாத ஒரு இடத்திற்கு அவரை கொண்டுசென்றார்கள் என அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட போது நான் ஒரு அறையில் இருப்பதைக் கண்டேன். அங்கு ஐந்து பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இராணுவ சீருடையில் காணப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்குள்ள அலுவல் பற்றி அவர்கள் என்னிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். வெளிநாட்டில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற தொடர்புகள் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் பதிலளிக்கவில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். முதலில் அறையப்பட்டும் குத்தப்பட்டும் நான் தாக்கப்பட்டேன். அப்போது அவர்கள் என்னைக் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். எனக்கு தடிகளால் அடிக்கப்பட்டு, எரியும் சிக்கரெட்டுக்களால் சூடுவைக்கப்பட்டதுடன் எனது தலை ஒரு நீர் பீப்பாயினுள் அமிழ்த்தப்பட்டது. கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தில் உடைகள் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டேன். 

அடிகளும் துன்புறுத்தல்களும் அடுத்த நாளும் தொடர்ந்தன. காலையில் எனக்கு கொஞ்சம் தண்ணீர் மாத்திரம் கொடுக்கப்பட்டது. அடுத்த இரவு, எனக்கு உடைகள் கொடுக்கப்பட்டு ஒரு சிறிய இருள் நிறைந்த அறையில் அடைக்கப்பட்டேன். அந்த இரவில் எனது அறைக்குள் ஒரு நபர் நுழைந்தார். அறை இருளாகவிருந்ததால், அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் எனது தலையைப் பிடித்து சுவரில் பலமாக அடித்து, எனது முகத்தை சுவருக்கு எதிரே தள்ளி என்னைப் பலவந்தமாகக் பாலியல்  வல்லுறவுக்கு உள்ளாக்கி  சித்திரவதைப்படுத்தினார்.

ஜீ டி (GD) என்பவரின் சம்பவம்

ஜீ டி (GD) என்பவர் 31 வயதுடைய ஒரு தமிழ் பெண். இவர் கொழும்பின் ஒரு சுற்றுப்புறத்திலுள்ள தனது வீட்டிலிருந்த போது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிவில் உடைகளில் நான்கு பேர் வந்திறங்கினார்கள். அவர்கள் C.I.D.அதிகாரிகள் என அவர்களை அறிமுகப்படுத்தி தனது வீட்டிலிருந்த குடும்ப அங்கத்தவர்கள் அனைவரினதும் அடையாள அட்டைகளை சோதனையிட வேண்டும் என எங்களிடம் கேட்டார்கள் என ஜீ டி (GD) என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார். வெளிநாட்டிலிருந்த தனது கணவனின் அடையாள அட்டையைப் பறித்துவிட்டு அவர்கள் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாக அவர் கூறினார்:

கொழும்பிலுள்ள C.I.D. அலுவலகத்தின் நான்காவது மாடிக்கு நான் கொண்டுசெல்லப்பட்டு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். எந்தவிதமான உணவோ அல்லது தண்ணீரோ எனக்குக் கொடுக்கப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்து ஆயுதம் தாங்கிய ஒரு அதிகாரி அடங்கலாக அதிகாரிகள் என்னைப் புகைப்படம் எடுத்துவிட்டு, எனது விரல் அடையாளங்களையும் பெற்றுக்கொண்டு, ஒரு வெறும் தாளில் கையொப்பமிடுமாறு செய்தார்கள். எனது கணவரின் விபரங்கள் எல்லாம் அவர்களிடம் இருப்பதாகக் கூறி அவர் இருக்கின்ற இடத்தைச் சொல்லுமாறு என்னிடம் கேட்டவண்ணமிருந்தார்கள். எனது கணவன் வெளிநாட்டில் இருப்பதாக நான் அவர்களிடம் கூறிய போது, அவர் எல்ரீரீஈ தரப்பின் ஆதரவாளர் எனத் தொடர்ந்தும் அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். பல பொருள்களைக் கொண்டு நான் அடிக்கப்பட்டேன். விசாரிக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஒரு எரியும் சிக்கரெட்டினால் சூடுவைக்கப்பட்டது. திரும்பத்திரும்ப நான் கன்னத்தில் அறையப்பட்டு, மணல் நிரப்பப்பட்ட ஒரு குழாயினால் அடிக்கப்பட்டேன். அடித்த போதெல்லாம் அவர்கள் எனது கணவரின் விபரங்களைக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்கள். ஒரு இரவு நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். சிவில் உடைகளில் எனது அறைக்கு இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இருவரும் எனது உடைகளைக் கிழித்து என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கதைத்தார்கள், அதனால் எனக்கு எதுவும் புரியவில்லை. இருளாக இருந்ததால் அவர்களின் முகங்களை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

டி எஸ் (DS) என்பவரின் சம்பவம்

டி எஸ் (DS) என்பவரின் தந்தைக்கு யாழ்ப்பாணத்தில் போட்டோ பிரதியெடுக்கும் (Photocopy) ஒரு கடை சொந்தமாகவிருந்தது. இவர் பிரச்சாரத் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை விநியோகிப்பதன் மூலம் எல்ரீரீஈ தரப்புக்கு உதவினார். 2005 ஆம் ஆண்டில், DS என்பவர் 13 வயதாகவிருந்த போது எல்ரீரீஈ தரப்பினால் பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டு 10 நாட்களாக அவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. அவர் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய பின்னர், எல்ரீரீஈ தரப்பின் கலாச்சார விழாக்களில் பங்குபற்றியும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் எல்ரீரீஈ தரப்பினருக்காக உழைத்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இவர் 17 வயதாகவிருந்த போது, பாடசாலை விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸும் இராணுவ அதிகாரிகளும் இணைந்த ஒரு குழுவினர் இவரைக் கைதுசெய்தனர். இவரின் கண்கள் கட்டப்பட்டு தெரியாத ஒரு தடுப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார் என DS என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற செயற்பாடுகள் அனைத்தையும் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். அந்தத் தரப்புக்கான எனது உழைப்புப் பற்றி எல்லா விடயங்களையும் அவர்களிடம் கூறினால், தன்னை வெளியில்செல்ல அனுமதிப்பதாக அவர்கள் கூறினார்கள். நான் எதையும் ஏற்க மறுத்தேன். அப்போது அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் சப்பாத்துக்களினால் மிதிக்கப்பட்டுக் குத்தப்பட்டேன். அப்போது எனது உடைகளை முழுமையாகக் கழற்றுமாறு அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டு எரியும் சிக்கரெட்டுக்களினால் எனக்கு சூடுவைக்கப்பட்டது. நான் மணல் நிரப்பப்பட்ட குழாய்களையும் முள்ளுக்கம்பிகளைக் கொண்டு தாக்கப்பட்டேன். அதிகாரிகள் எனது பாதங்களை தனியாக வைத்து மிதித்தும் பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு ப்ளாஸ்டிக் பையை எனது தலையில் பலமாக இட்டு என்னை மூச்சுத்திணறச் செய்யவும் முனைந்தனர்.

ஒரு அதிகாரி எனது முன்னிலையில் பாலியல் செயல்களைச் செய்தார். அப்போது என்னை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். அங்கு எந்தவித மலசலகூடமும் இருக்கவில்லை. ஒரு ப்ளாஸ்டிக் பையை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. என்னை விசாரித்த அதிகாரிகள் என்னை நித்திரைசெய்ய விடவில்லை. முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு அவர்கள் எனக்கு எந்தவிதமான உணவையும் தரவில்லை. அவர்கள் எனது கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு என்னைப் புகைப்படமெடுத்தார்கள். நான் இறுதியாக சிங்கள மொழியிலிருந்த ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமிட்டு அவர்கள் கூறிய எல்லவாற்றையும் ஒப்புக்கொண்டேன்.

சொந்த நிதியில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் சொந்த நிதியில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கட்டப்பட்ட மூன்று கட்டிடம் பாடசாலை அதிபரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. இந்த கட்டிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது -

mardi 26 février 2013

இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு அனுப்பிய இரகசியத் தகவல்

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, எதிர்க்காமல் இருக்கும்படி சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும் இரகசியத் தகவல் ஒன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

“சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு கிடைத்த இந்த இரகசிய தகவல், சிறிலங்கா அரசாங்கத் தரப்புக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்று சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும் வகையில் அந்த இரகசியத் தகவல் அமைந்திருந்ததாக, தகவல்கள் கூறுகின்றன. 

ஜெனிவாவில் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், பெரும் எண்ணிக்கையான உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றும், அது சிறிலங்காவுக்கு பாரிய தோல்வியை ஏற்படுத்தும் என்றும் சல்மான் குர்சித் அந்த இரகசியத் தகவலில் கூறியுள்ளார். 

இதையடுத்து இந்த விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க, சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று சல்மான் குர்சித்துக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதில் அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி உதயமாகுவதாகக் கூறி வவுனியாவில் பல இடங்களிலும் சுவரொட்டிகள்

தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி உதயமாகுவதாகக் கூறி வவுனியாவில் பல இடங்களிலும்  சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன. 

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சமகால ஆக்கபூர்வமான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காய், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகளினதும் பங்குபற்றுதலை உறுதி செய்வதற்காய், பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை  விரைவுபடுத்தவதற்காய், எமது தேசத்தை நாமே ஆளும் சக்தியாக உருவெடுப்பதற்காய், மேலும் பல அரசியல் புதுமைகளுக்காய்  இந்தக் கட்சி  உதயமாகின்றது என சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கட்சி தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக 024 2226436, 0777642329 என்ற தொலைபேசி இலக்கங்களும் இடப்பட்டுள்ளன.

புலிகளீன் அங்கவீனர்களுக்கு வீட்டு கடனுதவிகள்

முன்னாள் புலிகளீன்  அங்கவீனர்களுக்கு வீட்டு கடனுதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக புனர்வாழ்வு வேலைத்திட்ட யாழ். மாவட்ட காரியாலய அதிகாரி ஜகத் குமார இன்று தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் சரணடைந்த முன்னாள் புலி போராளிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் அங்கவினர்களுக்கு வீட்டுக்கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக புனர்வாழ்வு அமைச்சின் ஆணையாளர் நாயகம் மற்றும் புனர்வாழ்வ மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அவர் கூறினார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு வேலைத்திட்ட அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்க முடியுமென்றும், அவ்விண்ணப்ப படிவத்தினை சமூக சேவைகள் அமைச்சின் மூலம் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலில் விண்ணப்பங்கள் நிரப்பபட்டு புனர்வாழ்வு அமைச்சிற்கு அனுப்பும் பட்சத்தில் இரண்டரை இலட்சம் ரூபா, வீடு நிர்மாணிப்பதற்கும், வீட்டு திருத்த பணிகளுக்கான 1 1/2 லட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஈழத்தின்( இலங்கையில்) பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் மாத்தளை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள்



இன்றையதினம் முதலில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது உரையில்,



lundi 25 février 2013

1986 சூளைமேடு துப்பாக்கிச் சூடு குற்றப் பின்னணி உள்ள இலங்கை அமைச்சர் இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் யுக்தியே டக்ளஸ் .இந்நிலையில் எச்சரிக்கை என்றும் கருணாநிதி கூறுகிறார்.


திமுக தலைவர் மு கருணாநிதி இலங்கை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் ரோலர் மடி வலைகள் பயன்படுத்துவதைக் கண்டித்து படகுப் பேரணி நடத்தவிருப்பதாக எச்சரித்திருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இன்று திங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி நேற்று கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்திலே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
உலகின் எந்த நாடுகளிலும் கடல்களின் நடுவே நடைபெறாத அளவிற்கு இலங்கைக் கடல் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டு காலமாகத் தாக்கப்பட்டு வருவதும், தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்பட்டு வலைகள் அறுக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பறித்துக் கொண்டு செல்வதும், தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்று சிறையிலே அடைப்பதும், ஒவ்வொரு முறையும் இந்திய அரசை இதற்காகத் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் சார்பில் முறையிடுவதும், இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைக் கண்டிப்பதும் முடிவில்லாமல் வாடிக்கையாக நடந்து வரும் நிகழ்வுகளாகும் இந்நிலையில் உலக நாடுகள் மத்தியில் மஹிந்த ராஜபக்சே அரசின் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதை திசை திருப்புவதற்காக இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் யுக்தியே டக்ளஸ் தேவானந்தாவின் எச்சரிக்கை என்றும் கருணாநிதி கூறுகிறார்.
அத்தகைய பேச்சு இந்திய அரசை வலிய வம்புக்கு இழுத்துச் சவால் விடும் பாணியில் அமைந்திருக்கிறது எனும் கருணாநிதி, 1986 சூளைமேடு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்து, கொலைக் குற்றப் பின்னணி உள்ள இலங்கை அமைச்சர் ஒருவர், மீனவர்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசியிருப்பது சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததும், கடும் கண்டனத்திற்கு உரியதும் ஆகும் என்று கூறியிருக்கிறார். மேலும் அது குறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் திமுக தலைவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான வீடியோக்காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கும் நிலையில், போர்க்குற்றங்களுக்காக இலங்கை அரசு மீது பன்னாட்டு விசாரணை வேண்டுமெனக்கோரி சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதுவரகம் முன்பு டெசோ அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பெறுமென இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

dimanche 24 février 2013

பொலிஸாரைப் பகைவர்களாகவும் எதிரிகளாகவும் மக்கள் பார்ப்பதை விடுத்து நண்பர்காளாக பாருங்கள்!


இலங்கையில் பொலிஸாரைப் பகைவர்களாகவும் எதிரிகளாகவும் மக்கள் பார்ப்பதை விடுத்து நண்பர்காளாக பார்க்கவேண்டும் என்று நேற்று(22.02.2013) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார். 

தற்கோதும் பொதுமக்கள் பொலிஸாரை தங்கள் எதிர்கள் போலவே பார்த்து வருகின்றனர் இந்த நிலை மாறவேண்டும் பொலிஸாரை நண்பர்களாக பார்கும்போதுதான் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான நல்லுறவு மேம்படுத்தப்படும் என்றார்.

உதாரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களும் ஒரு நாள் மூடப்பட்டால் சட்ட ஒழுங்குகள் எவ்வாறு இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காடந்த 30 வருடகாலமாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் பதவியேற்றமை மகிழ்ச்சியாளிப்பதாகவும் இங்கு போக்குவரத்து சம்மந்தமான விடயங்களில் முக்கிய கவனம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்: பாதிரியார்கள் விரும்பினால்

Uk-romanகிருஸ்தவ பாதிரியார்கள் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கர்டினல் கெய்த் ஓ'பிரியன் கூறியுள்ளார். புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கர்டினல் குழுவில் இடம் பெற்றுள்ள இவர் ஸ்காட்லாந்து நாட்டில் வாழும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் தலைமை பிஷப் ஆக உள்ளார். 'பிரம்மச்சாரிய வாழ்வை சில பாதிரியார்களால் சீராக கடைபிடிக்க முடியவில்லை. எனவே, விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்ற மதம் சார்ந்த புனித கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்கவுள்ள போப் முடிவு செய்யலாம். பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா என்பது தொடர்பாக இயேசு கிறிஸ்து எதுவும் சொல்லவில்லை. எனவே இவ்விவகாரத்தில் பாதிரியார்கள் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.' என்று கெய்த் ஓ'பிரியன் கூறியுள்ளார்.

சம உரிமை இயக்கத்தின் மாபெரும் கையெழுத்து வேட்டை


batti demo
சம உரிமை இயக்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கெயெழுத்து வேட்டையொன்று இன்று   மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மொபெரும் கையெழுத்து வேட்டையில் வட-கிழக்கில் இரானுவ ஆட்சியை உடன் நிறுத்து, -கிழக்கில் அரசியல் சிறைக்கைதிகளை உடன் விடுதலை செய், கைதுகள் கடத்தல்களை உடன் நிறுத்து,  மக்களிடம் கொள்ளையிடுவதை உடன் நிறுத்து,  வட-கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது.  மட்டக்களப்புக்கு  பிரயாணிகள்,  பாதசாரிகள், வியாபாரிகள் மட்டு வாழ் மக்கள் என பலரும் இக்கையெழுத்து வேட்டையில் கையொப்பமிட்டு வருகின்றனர்.

samedi 23 février 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கடுமையானதாக அமையவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.28ம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அனைத்துலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் இவர்கள் இருவரும் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர். அங்கு இவர்கள் பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.எதிர்வரும் 26ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றினைக் கொண்டுவரவுள்ளது. இதேபோல் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கடுமையானதாக அமையவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.
இதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலான சந்திப்புக்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சுமந்திரன் எம்.பியும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் இருவரும் நான்கு நாட்கள் வரையில் பிரித்தானியாவில் தங்கியிருப்பார்கள் என தெரியவருகின்றது.

இலங்கை ஜனாதிபதியை கூண்டிலேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை

இனப்படுகொலை செய்துள்ள இலங்கை ஜனாதிபதியை கூண்டிலேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இது குறித்த அவரது அறிக்கை:
மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளை இலங்கை அரசு நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் தமிழர்களின் இதயங்களை பிழியும் வகையில் உள்ளன.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் இலங்கைப் படையினரால் பதுங்கு குழியில் பிடித்து வைக்கப்பட்டு, சிறிதும் இரக்கமில்லாமல், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதாரமான புகைப்படங்களை சேனல் - 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது.
காண்போர் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியை பெருக்கெடுக்கவைத்த அந்த புகைப்படங்கள் மட்டுமே, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமானவை ஆகும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களும், போருக்கு பின்னர் சிங்களப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளும் எவ்வளவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்; போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழ் சகோதரிகள் எப்படியெல்லாம் இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கை அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்களே போலியானவை என்றும், அவை வெட்டி ஒட்டப்பட்டவை என்றும் தில்லியில் அமர்ந்து கொண்டு இலங்கை தூதர் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்.
மிகக் கொடுமையான இந்த மனித உரிமை மீறலை கண்டிக்கவேண்டிய இந்திய அரசோ, அந்தப் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டு மவுனம் காக்கிறது. இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அந்நாட்டை காப்பாற்றுவதையே கடமையாக கொண்டிருக்கும் இந்தியா, அதன் போக்கை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும்போது இந்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
கொடுங்குற்றம் செய்த இலங்கை ஜனாதிபதியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ளது. எனவே, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.
அந்நாட்டு ஜனதிபதியை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும் - இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இப்போராட்டங்களில் பா.ம.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்