ஹோனியரா : பசிபிக் கடல்பகுதியில் அமைந்துள்ளது சாலமன் தீவுக்கூட்டம். நேற்று காலை இந்த தீவுக்கூட்டங்களில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனால் வீடுகள் அனைத்தும் குலுங்கின. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். கடும் நிலநடுக்கத்தை தொடர்ந்து, பசிபிக் கடல்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் வந்து சென்ற சில நிமிடங்களில் சாலமன் தீவுகள், வனது, நியூ கேல்டோனியா ஆகிய தீவுகளில் ஒரு மீட்டர் அளவிலான சிறிய சுனாமி அலைகள் தாக்கின. கடல் மட்டமும் இப்பகுதியில் சற்று உயர்ந்தது. ஆனால், சுனாமி பெரிய அளவில் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire