lundi 18 février 2013

1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு முதலமைச்சர்


1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான குழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத வெறுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிண்ணியா ஜம்இய்யத் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சபையின் நிருவாக சபை உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அங்கு முதலமைச்சர் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டில் 1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான பேரினவாதக்குழுக்களால் திட்டமிடப்பட்டு முஸ்லிம் விரோதச் செயல்கள் நடத்தப்படுகின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire