பேதங்களை ஏற்படுத்துபவர்களின் கைகளில் சிக்காது சாதாரண மக்கள் தொடர்பில் அவதானித்து அவதானமாக செயற்படுமாறும் தம்பர அமில தேரர் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “முஸ்லிம் நீதிய” (முஸ்லிம் சட்டம் ) என்ற சிங்கள மொழி மூலம் சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மத பேதங்களை ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறுஅவர் வலியுறுத்தினார். நாம் எமது இன மத பேதங்களுக்கு அப்பால் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். இங்கு பெளத்தம், முஸ்லிம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், கத்தோலிக்கம் போன்ற அனைத்து இன மத பேதங்களும் ஒரு துரும்பைப் போன்றது. துரும்புகளால் என்ன செய்ய முடியும். எனினும் அவை ஒன்றினையும் போது ஒரு கயிறாக சக்தி பெறுமல்லவா? கயிறுகள் பல இணையும் போது அதன் சக்தி எப்படி இருக்கும். அதே போன்றுதான் எமது சமூக நல்லிணக்கமும். இன்று நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் எமக்கு தெரிந்த முஸ்லிம்கள் அனைவரும் எங்களுடன் இணைந்தே பணியாற்றியிருக்கிறார்கள். எமது நாடு உலகின் உன்னதமான நான்கு மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைத்த நாடு எனவும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire