அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் நேற்று (07) இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளனர். குறித்த மீன் சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியுடையதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் இதுவரை பிடிக்கப்பட்ட திருக்கை மீன்களில் இந்த மீனே அதிக நிறையுடையது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட திருக்கை மீனை, கொழும்பு சந்தைக்குத் கொண்டு சென்று மொத்த வியாபாரிகளுக்கு பங்கிட்டு வழங்கப்போவதாகவும் உள்ளூர் வியாபாரி தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire