்கியூபாவின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோ (86) நீண்ட காலத்துக்குப் பின் பொது இடத்துக்கு வந்து மக்களை சந்தித்தார். உடல் நலம் குன்றி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் அவர், அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எல்வெதாதோ பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கியூபா மக்கள், உண்மையிலேயே புரட்சிகரமானவர்கள். கடந்த 50 ஆண்டு கால வரலாறே அதை நிரூபித்துவிட்டது. பொருளாதார, நிதி சார்ந்த பல்வேறு தடைகளை கியூபா மீது அமெரிக்கா விதித்தது. ஆனால், அந்தத் தடைகள் மூலம் கியூபாவை அமெரிக்காவால் தோற்கடிக்க முடியவில்லை. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் உள்ளிட்டோரின் முயற்சி காரணமாக இந்த கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்கா மற்றும் கனடா இடம்பெறாத இந்தக் கூட்டமைப்பின் தலைமை பதவியை கியூபா தற்போது வகித்து வருகிறது
Aucun commentaire:
Enregistrer un commentaire