காதலர் தினத்தை முன்னிட்டு இரு பாடல்கள் வெளியீடு
உலக காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக் கலைஞர்களால் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிளைன்ட் லவ்
இன்றைய காதலர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ். ஹிமாலயா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள இப்பாடலில் வரிகளை ரெ. துவாரகன் எழுதியுள்ளார். ஜீசஸ் யுவராஜ் இசைமைத்துள்ள இப்பாடலை ரெ. நிசாகரன் பாடியுள்ளார்.
பாடல்காட்சியை ஒளிப்பதிவு செய்து நவீன தொழில்நுட்ப முறைகளுடன் துசிகரன் தொகுத்துள்ளார்.
நேர்த்தியான காட்சியமைப்பு சிறந்த ஒலி நயத்தில் இனிமையான இசையில் அழகிய வரிகளுடன் இப்பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேடல் வித் லவ்
சாண் கிரியேஷன் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக புதிய காதல் பாடல் வெளிவந்துள்ளது. புலம்பெயர் இளைஞன் ஒருவனின் கடந்த கால வாழ்க்கை ஊர் உறவுக்ள பற்றிய ஏக்கம் மற்றும் காதல் பற்றிய தேடலாக இப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
பாடல் வரிகi சாளினி சார்ள்ஸ் எழுதியுள்ளார். பாடலுக்கான இசையை ரி. பிரியன் பி. பிரசாத் ஆகியோர் வழங்கியுள்ளனர். இப்பாடலை கே. கனிஸ்ரன் பாடியுள்ளனர். பாடலுக்கான காட்சி உருவாக்கம் படத்தொகுப்பை ரி. பிரியன் செய்துள்ளார். ராசி வீடியோ ஒளிப்பதிவைச் செய்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire