1986ம் ஆண்டு ஐ.தே.கட்சியில் இருந்தபோது யாழ் குடாநாட்டில் இருந்த பயங்கரவாதிகள் (புலி) களுக்கு எதிரான தாக்குதல் என்னும் பெயரில் அப்பாவிப் பொதுமக்களை கொன்றொழித்த ரணிலின் ஐ.தே.கட்சியி அதே ஆண்டு ஜனவரி மாதம் முதலாந்திகதி(1986.01.01) முதல் யாழ் குடாநாட்டிற்கான பொருளாதாரத் தடையினை அமுல்படுத்தி அங்குள்ள அப்பாவிகளை பட்டினியில் போட்டு செத்துக்கொண்டு இருந்த உயிர்களை பார்த்து சிரித்துக்கொண்டு வாழ்ந்தவர் இன்று பட்டினி போட்ட இடத்தில் இருந்து வந்த கூட்டமைப்பிக் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து ரணிலும் உண்ணாவிரதம் இருக்கப் போகின்றாராம் இந்த உண்ணாவிரத நாடகம் வரஇருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவிடலாம் என்ற நப்பாசையே தமிழ் மக்களே சற்று முளிச்சிருங்கள்.
வலி. வடக்கில் எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியமர்த்துமாறு கோரிவலிவடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ். நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சிவாச்சாரியர் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire