நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய மின் திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தும் முயற்ச்சியில் மாநில அரசு ஈடுப்பட்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாக மேட்டூரில் புதிதாக அமைக்கப்பட்ட அனல்மின் நிலையம் சமீபத்தில் மின்உற்பத்தியை தொடங்கியது.
600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த மின் நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது நேற்று 380 மெகாவாட்டாக அதிகரித்தது. இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மின் உற்பத்தி நிலையத்தில் எண்ணெய் கசிவு காரணமாக கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது எண்ணெய் கசிவை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire