இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என அந்நட்டு செனட்சபை உறுப்பினர் பலிமோவாகா தெரிவித்துள்ளார். இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது அமெரிக்கா கூடுதலான அழுத்தங்களை பிரயோகிப்பது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.30 ஆண்டுகளாக பாரிய யுத்தம் இலங்iயில் நீடித்து வந்ததாகவும், இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாமில் அமெரிக்கா யுத்தம் செய்தது எனவும், அங்கு இன்னமும் சில விடயங்களில் இயல்பு நிலைமை ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கையில் துரித கதியில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென விரும்புவது நியாயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் உத்தேசமானது, ஜனாதிபதி பரக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு புறம்பானத என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் குறிப்பிடத்தக்களவு நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.தேசிய நலன்களை முதனிலையாகக் கொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதனை தாம் அவரிடம் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.சில விமர்சனங்கள் எழுந்தாலும் நாட்டுக்கு மிகவும் பொருத்தமானதையே செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire