ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல சர்வதேச விமான நிலையத்தில் A-330 வகையைச் சேர்ந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்த மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கம் வெற்றி அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் உள்ள பாரிய அளவிலான விமானங்களை இவ் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்க முடியும் என்பதை மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த தரையிறக்கத்தின் மூலம் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
மத்தள சர்வதேச விமான நிலையம் பிராந்தியத்தில் உள்ள சகல வசதிகளையும் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய சுற்றாடலுக்கு உகந்த விமான நிலையமாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இதேவேளை, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பத்து உள்நாட்டு விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
மத்தல விமான நிலையத்தின் முதலாம் கட்டம் மார்ச் மாதம் 18ம் திகதி திறந்து வைக்கப்படுமென பிரியங்கர ஜயரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 2000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டதோடு அதன் நிர்மாணப் பணிகளுக்கென 209 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டது.
மிகப்பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் மத்தள விமான நிலையத்தின் ஓடுபாதை 4000 மீற்றர் நீலமும் 75 மீற்றர் அகலமும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire